3 மணி நேரம் தான்.. கவலைப்படாதீங்க 6 மாசத்துக்கு முன்னாடி செஞ்சதை நியூஸிலாந்துக்கு செய்வோம்.. ரோஹித் உறுதி

Rohit Sharma 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 36 வருடங்கள் கழித்து இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்ற நியூசிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அதன் காரணமாக இத்தொடரை வென்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் முதல் நாள் பெய்த மழையால் இரண்டாவது நாள் காலையில் வேகத்துக்கு சாதகமான பிட்ச்சில் 2 – 3 நேரங்கள் மட்டுமே நன்றாக விளையாடவில்லை என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மற்ற படி 46க்கு ஆல் அவுட்டாகியும் 2வது இன்னிங்சில் 462 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றிக்கு போராடியதாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

மோசமா விளையாடல:

மேலும் கடந்த 6 மாதத்திற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக முதல் போட்டியில் தோற்றாலும் கடைசியில் 4 – 1 (5) என்ற கணக்கில் வென்றதைப் போல நியூசிலாந்து அணிக்கு இந்தியா பதிலடி கொடுத்து வெல்லும் என்று ரோஹித் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் 2 – 3 மணி நேரங்களை தவிர்த்து நாங்கள் நல்ல டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடினோம் என்றே நினைக்கிறேன்”

“அந்த சரிவுக்கு பின் போட்டியை எதிரணியிடம் விடுவது மிகவும் எளிது. ஆனால் இந்தியா அப்படிப்பட்ட அணி கிடையாது. நாங்கள் முடிந்தளவுக்கு திரும்பி சண்டையிட்டு போட்டியில் இருக்க விரும்பினோம். நாங்கள் 46க்கு ஆல் அவுட்டான பின் அவர்கள் 190-3 என்ற வலுவான நிலையில் இருந்தனர். ரவீந்தரா – சவுதி ஆகியோர் போட்டியை கொஞ்சம் அதிகமாக எடுத்துச் சென்றனர். ஆனால் 2வது இன்னிங்ஸில் நாங்கள் விரும்பிய விதத்தில் விளையாடினோம்”

- Advertisement -

ரோஹித் சர்மா உறுதி:

“அதனால் ஒரு கட்டத்தில் வெற்றியை நெருங்கிய நாங்கள் 350 ரன்கள் பின்தங்கியதாக உணரவில்லை. அப்படி விளையாடிவதற்காக நான் பெருமைப்படுகிறேன். எங்கள் வீரர்கள் தெளிவுடன் சுதந்திரமாக விளையாடும் மனநிலையை கொண்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக கடந்த முறை நாங்கள் முதல் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றோம். இங்கேயும் சில மணி நேரங்களை தவிர்த்து நாங்கள் நன்றாக கிரிக்கெட்டை விளையாடினோம்”

இதையும் படிங்க: பண்ட் உதவிருக்காரு.. சர்பராஸ் கான் குண்டா இருக்காருன்னு நினைக்காதீங்க.. ஆஸிக்கு போவாரு.. சூரியகுமார்

“தோல்வியை சந்தித்தாலும் நாங்கள் போராடுவதற்கான வழியை கண்டறிந்தோம். இங்கிலாந்துக்கு எதிராக தோற்றம் பின்னர் நாங்கள் 4 தொடர்ச்சியான போட்டிகளில் வென்றோம். எனவே அடுத்த 2 போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களுக்குத் தெரியும். எந்த பதற்றமும் இல்லாமல் புனேவில் அதற்காக அதை முன்னோக்கி நாங்கள் செல்ல முயற்சிப்போம்” என்று கூறினார்.

Advertisement