பாகிஸ்தானால் முடியும் போது இந்தியாவால் முடியாதா? ஆஸிக்கு முன் பும்ரா பிரச்சனையை சரி பண்ணுங்க.. பசித் அலி

Basit Ali
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் சொந்த மண்ணில் அந்த அணிக்கு எதிராக இந்தியா 36 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இத்தொடரை வெல்லவும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறவும் கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் 3 வருடங்கள் கழித்து டெஸ்ட் போட்டியில் சில தினங்களுக்கு முன் வெற்றி பெற்றது. அப்படி சுமாரான ஃபார்மில் இருக்கும் பாகிஸ்தானே வெல்லும் போது நல்ல ஃபார்மை கொண்டுள்ள இந்தியா கண்டிப்பாக இத்தொடரில் வெல்லும் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார். ஆனால் இந்திய அணியில் பும்ராவுக்கு நிகரான வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்தியா வெல்லும்:

எனவே அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடருக்கு முன் இந்தியா அந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று பசித் அலி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிருந்து இந்தியா கம்பேக் கொடுத்து நியூசிலாந்துக்கு எதிராக தொடரை வெல்லுமா? ஆம் வெல்வார்கள் என்று நான் சொல்வேன். பாகிஸ்தான் மூன்று வருடங்கள் 8 மாதங்கள் கழித்து ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றது”

“மறுபுறம் இந்தியா கடந்த ஒன்றரை வருடங்களில் 3 போட்டிகளில் மட்டுமே தோற்றுள்ளது. ஆனால் அனைத்து தொடர்களையும் வென்றுள்ளது. பாகிஸ்தான் சொந்த மண்ணிலேயே தொடர்களை தோற்றுள்ளது. தற்போது இந்தியா தோல்வியை சந்தித்துள்ளதால் அனைவரும் கேஎல் ராகுல் பக்கம் திரும்பியுள்ளனர். இதை ராகுல் டிராவிட் போல கம்பீர் எடுத்துக் கொள்வாரா என்பதைப் பார்ப்போம்”

- Advertisement -

பும்ராவுக்கு பார்ட்னர் இல்லை:

“ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக இது கௌதம் கம்பீருக்கு விழிப்பை ஏற்படுத்தும் தோல்வியாகும். 8 ஓவர்களை பும்ரா தொடர்ச்சியாக வீசியது எனக்கு வாசிம் அக்ரம், வகார் யூனிஸை நினைவுப்படுத்தியது. ஆனால் பும்ராவுடன் அசத்தக்கூடிய 2 வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்”

இதையும் படிங்க: 500 விக்கெட்ஸ்க்கு இதான் மரியாதையா? ரோஹித் தப்பே பண்ணாலும் கம்பீர் என்ன செஞ்சாரு? மனோஜ் திவாரி

“தற்சமயத்தில் பும்ராவுடன் பார்ட்னர்ஷிப் அமைக்கும் அளவுக்கு இந்தியாவிடம் நல்ல வேகப்பந்து வீச்சாளர் இல்லை. ஷமி ஆஸ்திரேலிய தொடருக்கு முன் ஃபிட்டாக வேண்டும். அதே சமயம் விராட் கோலி 70 ரன்கள் குவித்தது நல்ல அறிகுறி. சர்பராஸ் கான் 150 ரன்கள் குவித்து அபாரமாக விளையாடினர். ரிஷப் பண்ட் எப்போதும் நல்ல டெஸ்ட் பிளேயர்” என்று கூறினார்.

Advertisement