500 விக்கெட்ஸ்க்கு இதான் மரியாதையா? ரோஹித் தப்பே பண்ணாலும் கம்பீர் என்ன செஞ்சாரு? மனோஜ் திவாரி

Manoj Tiwary
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 36 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்தித்தது. முன்னதாக அந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்தது 46க்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்திக்க முக்கிய காரணமானது.

அதே போல ஐந்தாவது நாளில் 107 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகிய இடது கை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்தனர். அப்போது உலகிலேயே அதிக முறை இடது கை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கி சாதனை படைத்துள்ள அஸ்வினை கேப்டன் ரோகித் பவுலிங் செய்ய வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை செய்யாத அவர் பும்ரா – சிராஜை பயன்படுத்தினார்.

- Advertisement -

500 விக்கெட்டுக்கு மரியாதை:

அதில் எதிர்பார்த்ததைப் போலவே பும்ராவை போல் சிராஜ் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடைசியில் நியூசிலாந்துக்கு வெறும் 10 ரன்கள் மட்டும் தேவைப்பட்ட போது பெயருக்காக அஸ்வினுக்கு 2 ஓவர்களை ரோஹித் சர்மா வழங்கியது இந்தியாவின் தோல்வியை எளிதாக்கியது. இந்நிலையில் அந்த நேரத்தில் தவறு செய்த ரோஹித் சர்மாவுக்கு ஆலோசனை வழங்காமல் பயிற்சியாளர் கம்பீர் என்ன செய்து கொண்டிருந்தார்? என முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.

இது தான் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து அஸ்வினுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையா என்றும் மனோஜ் திவாரி மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிட்ச்சை தவறாக படித்ததால் தவறான அணியை தேர்ந்தெடுத்ததாக ரோகித் ஒப்புக்கொண்டார். இந்தியா 3க்கு பதிலாக 2 ஸ்பின்னர்களுடன் விளையாடியிருக்க வேண்டும்.

- Advertisement -

கம்பீர் என்ன செய்தார்:

“ஆனால் அந்த இருவரில் குறைவாக பயன்படுத்தப்பட்ட ஒருவராக அஸ்வின் இருப்பார் என்று நான் நினைக்கவே இல்லை. ஏனெனில் அவர் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 107 ரன்களை கட்டுப்படுத்தும் போது நீங்கள் பும்ராவுடன் அவரை அட்டாக் செய்ய கொண்டு வந்திருக்க வேண்டும். சில நேரங்களில் நல்ல கேப்டன்களும் தவறு செய்வார்கள்”

இதையும் படிங்க: 232 ரன்ஸ்.. மழையால் கூட எங்களை நிறுத்த முடியாது.. தொடரும் இலங்கையின் வெற்றி நடை.. திணறும் வெ.இ

“அதை தவிர்ப்பதற்காகவே பயிற்சியாளர் கொடுக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அங்கே என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை” என்று கூறினார். இதை தொடர்ந்து இத்தொடரை வெல்வதற்கும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிகரிக்கவும் கடைசி 2 போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

Advertisement