டி20 உலககோப்பைக்கு பின் 2 புதிய கிரிக்கெட் தொடர்கள் அறிவிப்பு – வெளியான அட்டவணை இதோ

IND
- Advertisement -

உலக கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் போல நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருக்கும் இந்தியா எப்போதுமே ஓய்வில்லாமல் உள்நாட்டிலும் வெளி நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாட்டுக்காகப் பெருமை சேர்க்கும் வகையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்த இந்தியா அடுத்ததாக அயர்லாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் விளையாடும் அந்த சுற்றுப் பயணம் ஜூன் 28-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது.

chahal deepak hooda IND vs IRE

அதை தொடர்ந்து 2 நாட்கள் இடைவெளியில் ஜூலை 1இல் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த வருடம் கிடப்பில் போட்டு வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை வீரர்களைக் கொண்ட இந்தியா பங்கேற்கிறது. அத்துடன் அதே இங்கிலாந்துக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் பங்கேற்கிறது. வரும் ஜூலை 17இல் நிறைவுக்கு வரும் அந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அப்படியே 4 நாட்கள் இடைவெளிக்குள் வெஸ்ட் இண்டீசுக்கு பறக்கும் இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது.

- Advertisement -

டி20 உலககோப்பை:
வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வரும் அந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேராக தாயகம் திரும்பும் இந்திய அணியினர் ஒருசில வாரங்கள் ஓய்வுக்குப் பின் பக்கத்தில் இருக்கும் இலங்கைக்கு சென்று புகழ் பெற்ற ஆசிய கோப்பையில் பங்கேற்கின்றனர். டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இம்முறை 20 ஓவர் தொடராக ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறும் இந்த தொடரில் பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளை இந்தியா எதிர்கொள்கிறது.

INDvsPAK

அதன்பின் செப்டம்பர் மாத இறுதியில் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் கடைசி தொடராக டி20 உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை தனது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா எதிர்கொள்கிறது. அந்த தொடரை முடித்துக் கொண்டு நேராக ஆஸ்திரேலியாவுக்கு பறக்கும் இந்தியா ஐசிசி டி20 உலககோப்பை 2022 தொடரில் களமிறங்க உள்ளது. குறிப்பாக அக்டோபர் 23-ஆம் தேதியன்று புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா கடந்த வருடம் துபாயில் பெற்ற படுதோல்விக்கு அபாரமாக வெற்றி பெற்று பழி தீர்க்க காத்திருக்கிறது.

- Advertisement -

நியுசிலாந்து தொடர்:
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கு பின்பு இந்தியா பங்கேற்கும் 2 புதிய கிரிக்கெட் தொடரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை முடித்துக் கொண்டு நாடு திரும்பாமல் அப்படியே பக்கத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கு பயணிக்கும் இந்தியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

INDvsNZ 1

அதற்கு கைமாறாக வரும் 2023 ஜனவரியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது பக்கத்தில் இருக்கும் இந்தியாவுக்கும் பயணிக்கும் நியூசிலாந்து அதேபோல ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்க உள்ளதாக உறுதி அளித்துள்ளது. அதற்கான அட்டவணையை பிசிசிஐ பின்பு அறிவிக்கும் என்று தெரிவித்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் டி20 உலகக்கோப்பைக்கு பின் தங்களது மண்ணில் இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் தொடரின் அட்டவணை இதோ:
முதல் டி20, நவம்பர் 18, ஸ்கை ஸ்டேடியம், வெலிங்க்டன்
2-வது டி20, நவம்பர் 20, பே ஓவல், டௌரங்கா
3-வது டி20, நவம்பர் 22, மெக்லீன் பார்க், நேப்பியர்

இதையும் படிங்க : IND vs ENG : இம்முறை இந்தியாவுக்கு இருக்கு, கேப்டனா அவரே வந்தாலும் கவலையில்லை – எச்சரிக்கும் முன்னாள் வீரர்

முதல் ஒரு நாள் போட்டி, நவம்பர் 25, ஈடன் பார்க், ஆக்லாந்து
2-வது ஒருநாள் போட்டி, நவம்பர் 27, செடன் பார்க், ஹமில்டன்
3-வது ஒருநாள் போட்டி, நவம்பர் 30, ஹாஜ்லே ஓவல், க்றிஸ்ட்சர்ச்

Advertisement