IND vs ENG : இம்முறை இந்தியாவுக்கு இருக்கு, கேப்டனா அவரே வந்தாலும் கவலையில்லை – எச்சரிக்கும் முன்னாள் வீரர்

INDvsENG
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி வரும் ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்குகிறது. கடந்த வருடம் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்த விராட் கோலி தலைமையிலான இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அந்த தொடரில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை மண்ணைக் கவ்வ வைத்த இந்தியா 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது கரோனா பரவல் காரணமாக அத்தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.

INDvsENG

- Advertisement -

தற்போது நடைபெறப்போகும் கடைசி போட்டியில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா ஏற்கனவே விராட் கோலி பெற்றுக் கொடுத்த வெற்றியை பினிஷிங் செய்து 2007க்கு பின் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு டெஸ்ட் தொடரை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் மட்டுமே வெற்றிகளைப் பெற்றுள்ள அவர் முதல் முறையாக இப்போட்டியின் வாயிலாக வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை வழி நடத்த உள்ளதால் இப்போட்டியில் வெற்றி பெறுவது அவருக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

மாஸ் இங்கிலாந்து – கேப்டன் யார்:
ஏனெனில் கடந்த முறை ஜோ ரூட் தலைமையில் திண்டாடிய இங்கிலாந்து இம்முறை புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் – புதிய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் புத்துயிர் பெற்றது போல நேற்று நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்து மிரட்டலான வெற்றி பெற்றது. அதிலும் 3 போட்டிகளிலும் அந்த அணி நிர்ணயித்த 250க்கும் மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக துரத்திய அந்த அணி தற்போது வலுவான மாஸ் காட்டும் அணியாக மாறியுள்ளது. எனவே இந்த கடைசி போட்டியில் வென்று குறைந்தபட்சம் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் தலை நிமிரும் வகையில் விளையாட இந்தியாவுக்கு சவாலை கொடுக்க காத்திருக்கிறது.

England Test Ben Stokes

மறுபுறம் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பங்கேற்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதனால் இந்த முக்கிய போட்டியில் அவரால் களமிறங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அவரால் களமிறங்க முடியாமல் போனால் கேஎல் ராகுல் இல்லாத சமயத்தில் சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் சொதப்பிய பண்ட்க்கு பதிலாக மற்றொரு கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்படுவார் என்ற செய்திகள் வெளியாகி வருகிறது.

- Advertisement -

கோலியே வந்தாலும்:
அதேசமயம் ரோகித் இல்லாத நிலைமையில் இந்த தொடரில் ஏற்கனவே பெற்ற 2 வெற்றிகளுடன் மொத்தம் 40 வெற்றிகளை குவித்து வெற்றிகரமான ஆசிய கேப்டனாக மிரட்டல் சாதனை படைத்துள்ள விராட் கோலி மட்டுமே இந்தியாவை வழி நடத்த தகுதியானவர் என்பதால் இந்த போட்டியில் அவர் கேப்டனாக செயல்பட்டு வெற்றியை பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இருப்பினும் தாமாக பதவி விலகிய காரணத்தால் அவர் மீண்டும் கேப்டனாக வரமாட்டார் என்றே எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் மிரட்டல் அணியாக உருவெடுத்துள்ள இங்கிலாந்து இப்போட்டிக்கு விராட் கோலியே மீண்டும் கேப்டனாக வந்தாலும் பயப்படாது என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரேம் ஸ்வான் எச்சரித்துள்ளார்.

Swann

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரை வெற்றிகரமாக துவங்கிய விராட் கோலி ஏன் கேப்டனாக பினிஷிங் செய்யக்கூடாது என்று நீங்கள் கூறலாம். விராட் அதை செய்ய விரும்புகிறாரா என்பது எனக்கு தெரியாது. அவர் வந்தாலும் இங்கிலாந்து அதற்காக கவலைப்படும் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை பென் ஸ்டோக்ஸ் பற்றி நீங்கள் நினைத்தால் விராட் கோலி கேப்டனாக இருக்க வேண்டுமென்று அவர் மிகவும் விரும்புவார். மேலும் விராட் கோலிக்கு எதிராக ஜோ ரூட்டின் அணி எவ்வாறு விளையாடியது என்பதை அவர் நேரிடையாக ஒப்பிட்டு பார்க்க முடியும்”

- Advertisement -

“இந்தியாவின் கேப்டனை பற்றி இங்கிலாந்து அதிகம் கவலைப்படாது. கேப்டன் யாராக இருந்தாலும் சிறப்பாக பந்துவீசி இந்திய பேட்டிங் மீது அழுத்தத்தை போட இங்கிலாந்து பவுலர்கள் முயற்சிப்பார்கள். எங்களது காலத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய போது அந்த அணியில் நிறைய ஜாம்பவான்கள் இருந்தனர். ஆனாலும் அவர்களை நாங்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக்கினோம். எனவே கேப்டன் யார் என்பது பெரிய விஷயமல்ல” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs ENG : இதே மாதிரி வந்து அடிப்போம், டெஸ்ட் சாம்பியனை சாய்த்தபின் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த வீரர்

அதாவது ரோகித் சர்மா அல்லது விராட் கோலி என இந்திய அணியின் கேப்டன் யாராக இருந்தாலும் கடந்த முறை ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை தோற்கடித்தற்கு இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து நிச்சயம் பதிலடி கொடுக்கப் போகிறது என்று கிரேம் ஸ்வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement