ஓவர்கள் குறைக்கப்பட்டும் மழை நிற்காவிட்டால் ஐ.சி.சி யின் விதிகள் என்ன கூறுகிறது தெரியுமா ? – விவரம் இதோ

Pitch
- Advertisement -

உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

ind nz

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்நிலையில் மழையால் ஆட்டம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் 2 மணி நேரம்வரை icc விதிமுறைகள் படி அம்பயர்கள் காத்திருப்பார்கள். அதுவரை ஓவர்கள் குறைக்கப்படாது. அப்படியே இரண்டு மணி நேரம் கழித்தும் மழை நிற்காவிட்டால் போட்டி ஓவர்கள் குறைக்கப்படும். டிஆர்எஸ் விதிப்படி வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்படும். குறைந்தபட்சம் 20 ஓவர்கள் வரை குறைக்கப்படலாம்.

Ind-vs-Nz

அப்படி 20 ஓவர்களுக்கும் கீழ் ஓவர்கள் குறைக்கப்பட்டால் இன்றைய போட்டியை அடுத்த நாளுக்கு எடுத்துச் செல்லலாம் அவ்வாறு எடுத்துச் செல்லும்போது இன்றைய நாளில் நியூசிலாந்து அணி எங்கு போட்டியை விட்டதோ அங்கிருந்தே மீண்டும் தொடங்கப்படும். நாளையும் மழை பெய்தால் லீக் சுற்றில் அதிக புள்ளிகளைப் பெற்ற இந்திய அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லும் என்பது ஐசிசியின் விதிகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறலாம்.

Advertisement