சிக்ஸர் மழை பொழிந்த உலக சாதனை தொடர்.. இங்கிலாந்தை நொறுக்கி உண்மையான பஸ்பால் ஆடிய இந்தியயா

IND vs ENG 102
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடியது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற இந்த தொடரில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடிப்போம் என்று மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற இங்கிலாந்து வீரர்கள் ஆரம்பத்திலேயே எச்சரித்தனர்.

அதற்கேற்றார் போல் ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியாவை கடைசியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து அபார வெற்றி கண்டது. அதனால் 1 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற அந்த அணி சொன்னதை செய்து காட்டும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் உறுதியாக நம்பினார்.

- Advertisement -

உலக சாதனை தொடர்:
ஆனால் அதன் பின் சுதாரித்து விளையாடிய இந்தியா அதற்கடுத்த 4 போட்டிகளில் மிகவும் கடுமையாக போராடி இங்கிலாந்தை வீழ்த்தியது. குறிப்பாக தேவைப்படும் நேரத்தில் அதிரடியாக விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்கள் அழுத்தமான நேரத்தில் சூழ்நிலையையும் இங்கிலாந்து பவுலர்களையும் மதித்து நிதானமாக விளையாடி வெற்றியை உறுதி செய்தனர்.

மறுபுறம் அதிரடியாக விளையாடுவோம் என்று சொன்ன இங்கிலாந்து அதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான மரியாதையை கொடுத்து சூழ்நிலைக்கு தகுந்தார் போல் செயல்படாமல் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்து பரிதாபமாக வீட்டுக்கு கிளம்பியது. இந்த சூழ்நிலையில் 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் 100 சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட முதல் தொடராக இந்தியா – இங்கிலாந்து 2024 டெஸ்ட் தொடர் புதிய உலக சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக இந்த தொடரில் இங்கிலாந்து அணியை சரமாரியாக அடித்து நொறுக்கிய இந்தியா மொத்தம் 72 ரன்கள் பறக்க விட்டது. அதில் ஜெய்ஸ்வால் மட்டும் தனி ஒருவனாக 26 சிக்ஸர்கள் விளாசி ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்தார். ஆனால் டி20 போல விளையாடுவோம் என்று சொன்ன இங்கிலாந்து இந்த தொடரின் 5 போட்டிகளிலும் சேர்த்து 30 சிக்சர்கள் மட்டுமே அடித்தது.

இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? பத்திரிக்கை நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த – கேப்டன் ரோஹித் சர்மா

அந்த வகையில் இந்த தொடரில் 2 அணிகளும் சேர்ந்து மொத்தம் 102 சிக்ஸர்கள் அடித்தன. அதனால் இந்த தொடர் உலகிலேயே 100 சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட முதல் டெஸ்ட் தொடராக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா 2023 ஆஷஸ் தொடரில் 74 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனையாகும். மொத்தத்தில் இந்த தொடரில் உண்மையான பஸ்பால் விளையாடிய இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரை வெல்வதற்கு வேகம் மட்டும் போதாது நிதானமும் அவசியம் என்பதை இங்கிலாந்துக்கு கற்பித்துள்ளது என்றால் மிகையாகாது.

Advertisement