அப்படின்னா 2 கதை முடிஞ்ச்சுன்னு சொல்லுங்க? சிட்னியில் 46 வருடமாக திணறும் இந்தியா – வரலாற்று புள்ளிவிவரம்

India SCG
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா பின்தங்கியுள்ளது. அதன் காரணமாக 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா நழுவ விட்டுள்ளது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனல் வாய்ப்பையும் கிட்டத்தட்ட இந்தியா இழந்துள்ளது.

எஞ்சிய 10% வாய்ப்பை தக்க வைக்க வேண்டுமெனில் அடுத்ததாக சிட்னியில் நடைபெறும் கடைசிப் போட்டியில் இந்தியா கண்டிப்பாக வென்றாக வேண்டும். அது போக அடுத்ததாக இலங்கை மண்ணில் ஆஸ்திரேலியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா ஒரு வெற்றியை கூட பெறக்கூடாது.

- Advertisement -

ராசியில்லாத சிட்னி:

அந்த 2 அசாத்தியமான நிகழ்வுகள் நடைபெற்றால் இந்தியா பைனலுக்கு தகுதி பெறும். அதற்கு முதலில் 5வது போட்டியில் இந்தியா வென்றாக வேண்டும் என்பது ரசிகர்களிடம் கவலையை கொடுத்துள்ளது. ஏனெனில் தற்சமயத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா மட்டுமே பவுலிங் துறையில் தனி ஒருவனாக இந்தியாவின் வெற்றிக்கு போராடுகிறார். அதே போல பேட்டிங்கில் நிதிஷ் ரெட்டி, ஜெய்ஸ்வால் மட்டுமே அசத்துகிறார்கள்.

சிறப்பாக விளையாட வேண்டிய அனுபவமிக்க ரோஹித் சர்மா, விராட் கோலி, சிராஜ் ஆகியோர் தடுமாற்றமாகவே விளையாடி வருகிறார்கள். அதனாலேயே இந்திய அணி இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அது போன்ற சூழ்நிலையில் சிட்னி கிரிக்கெட் மைதானம் இந்தியாவுக்கு ராசியில்லாத ஒன்று என்பது ரசிகர்களின் கவலையை மேலும் அதிகரிக்கிறது. ஏனெனில் இந்த மைதானத்தில் சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா விளையாடியது.

- Advertisement -

கதை முடிகிறதா:

அந்த போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில் 1968ஆம் ஆண்டு இந்தியா தோல்வியை சந்தித்தது. இருப்பினும் 1978ஆம் ஆண்டு பிஷன் சிங் பேடி தலைமையிலான இந்திய அணி பாப் சிம்ப்சன் தலைமையிலான ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் மற்றும் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதுவே அந்த மைதானத்தில் முதலும் கடைசியுமாக இந்தியா பதிவு செய்த ஒரே ஒரு வெற்றியாகும்.

இதையும் படிங்க: மெல்போர்ன் டெஸ்ட்டில் சுப்மன் கில் நீக்கப்பட்டதுக்கு இதுதான் உண்மை காரணம் – ரோஹித் சர்மா பதில்

ஏனெனில் 1986, 1992, 2004, 2015, 2019, 2021 வருடங்களில் அங்கே போராடி டிரா செய்த இந்தியா 2000, 2008, 2012 வருடங்களில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இந்த விவரத்தை அறியும் ரசிகர்கள் அப்படின்னா கதை முடிந்தது என்று சொல்லுங்க? என ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் சிட்னியில் இம்முறை தோற்றால் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2014க்குப்பின் தக்க வைக்காமல் ஆஸ்திரேலியாவிடம் இழப்பதுடன் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெறாமல் இந்தியா வெளியேறும்.

Advertisement