- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா 339/8.. ராகுல் காயம், கோலி சொதப்பல்.. கில், ஜெய்ஸ்வால் அசத்தல்.. பயிற்சி போட்டி ரிப்போர்ட்

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் தோற்றதால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல அத்தொடரில் 4 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணியினர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக இந்திய அணி தங்களுக்குள்ளேயே விளையாடும் பயிற்சி போட்டி நவம்பர் 15ஆம் தேதி துவங்கியது. ஆஸ்திரேலியாவில் வாகா மைதானத்தில் நடைபெறும் அந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தனர். அதில் ரோஹித்துக்கு பதிலாக ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

- Advertisement -

ராகுல் ஏமாற்றம்:

அந்த போட்டியில் ராகுல் ஆரம்பத்திலேயே தன்னுடைய கையில் காயத்தை சந்தித்தார். அதனால் மேற்கொண்டு அவர் விளையாடாமல் போட்டியிலிருந்து விலகினார். அடுத்ததாக களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 15 ரன்களில் 2வது ஸ்லிப் பகுதியில் எட்ஜ் கொடுத்து அவுட்டானார். அதன் பின் மீண்டும் அவர் பேட்டிங் செய்வதற்காக வந்தார்.

அந்த வாய்ப்பில் நல்ல துவக்கத்தை பெற்ற அவர் 30 ரன்கள் எடுத்திருந்த போது லேசாக காயமடைந்து வெளியேறினார். அதனால் மேற்கொண்டு காயத்தை சந்திக்க விரும்பாததால் அவர் விளையாடவில்லை. அந்த வகையில் பயிற்சி போட்டியில் ராகுல் காயத்தையும் விராட் கோலி ஏமாற்றத்தையும் சந்தித்தார்கள் என்று சொல்லலாம்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் அசத்தல்:

இருப்பினும் மறுபுறம் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக விளையாடும் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் பேட்டிங் செய்தார். அவருடன் சேர்ந்து சுப்மன் கில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் ஜெய்ஸ்வால் முதல் வாய்ப்பில் 15 ரன்னில் அவுட்டானாலும் 2வது வாய்ப்பில் 58* ரன்களும், சுப்மன் கில் முதல் வாய்ப்பில் 28 ரன்னில் அவுட்டானாலும் 2வது வாய்ப்பில் 42* ரன்களும் குவித்து மற்ற வீரர்களுக்கு வழி விட்டு வெளியேறினார்கள்.

இதையும் படிங்க: ஐபிஎல் பவுலர்களுக்கு இதெல்லாம் தெரியாது.. ஷமி ஆஸியில் எப்போது விளையாடுவார்? சுக்லா பேட்டி

ரிஷப் பண்ட் முதல் வாய்ப்பில் 19 ரன்னில் அவுட்டானாலும் 2வது வாய்ப்பில் 24* ரன்களும் இறுதியில் நிறைவுக்கு வந்த முதல் நாள் முடிவில் இந்திய அணி 75 ஓவர்களில் 339-8 ரன்கள் குவித்தது. இந்த பயிற்சி போட்டி இன்னும் 2 நாட்கள் நடைபெற உள்ளது. அதில் இந்திய பவுலர்கள் அடுத்தடுத்த நாட்களில் பந்து வீசி பயிற்சிகளை எடுக்க உள்ளார்கள். அப்போது இந்திய பவுலர்களின் செயல்பாடுகளும் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -