இங்கிலாந்தில் 0 இந்திய ரசிகர்கள்.. கேப்டன் சுப்மன் கில் படைக்கு கிடைத்த ஏமாற்றம்.. வெளியான தகவல்

Vimal Khumar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது. அந்தத் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி நேற்று இரவு இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது.

சொல்லப்போனால் ஏற்கனவே அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 2 உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் விளையாடுவதற்காக ஏற்கனவே பெரும்பாலான இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்றடைந்து விட்டனர். தற்போது ஐபிஎல் 2025 தொடரில் விளையாடிய சாய் சுதர்சன், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட எஞ்சிய வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார்கள்.

- Advertisement -

ரோஹித், கோலி இல்லை:

அங்கே சனிக்கிழமை அன்று இங்கிலாந்தின் லண்டன் விமான நிலையத்தில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா அணியினர் தரையிறங்கினார்கள். வழக்கமாக போல இங்கிலாந்தில் இருக்கும் நிறைய இந்திய ரசிகர்கள் இந்திய அணியை வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்முறை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியை வரவேற்பதற்கு விமான நிலையத்தில் ஒரு ரசிகர் கூட இல்லை.

அதனால் வரவேற்பற்ற வெறிச்சோடிய சூழ்நிலையில் இந்திய வீரர்கள் சாதாரண பயணிகளைப் போல விமான நிலையத்திலிருந்து வெளியேறி சென்றனர். இது பற்றி இந்தியாவைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் விமல் குமார் அங்கிருந்து நேரடி தகவல் கொடுத்துள்ளார். சமீபத்தில் இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நாயகர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றார்கள்.

- Advertisement -

வரவேற்பு இல்லை:

அதனாலேயே தற்போதைய இளம் இந்திய அணிக்கு விமான நிலையம் வரை சென்று வரவேற்க எந்த ரசிகரும் செல்லவில்லை என்றே சொல்லலாம். இது பற்றி விமல் குமார் ட்விட்டரில் வீடியோ பதிவாக பேசியது பின்வருமாறு. “இங்கே எந்த எதிர்பார்ப்பும் இருப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஒரு ரசிகர் அல்லது செய்தியாளர் கூட இங்கே காணவில்லை”

இதையும் படிங்க: தோனி மட்டும் அந்த முடிவை எடுத்தா அது சி.எஸ்.கே அணிக்கு மிகப்பெரிய இழப்பு – மைக்கல் கிளார்க் கருத்து

“இதற்கு முன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற எந்த வெளிநாடுகளுக்குச் சென்றாலும் இந்திய அணிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்” என்று கூறினார். மொத்தத்தில் எதிர்பார்ப்பு இல்லாத சூழ்நிலை இளம் இந்திய அணிக்கு சாதகமானதாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதை வைத்து அழுத்தமின்றி விளையாடுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement