9க்கு 8 தோல்வி.. வெறும் 257 டார்கெட் 44%.. கிங் கோலியின் அருமை இப்போ புரியுதா? பாதாளத்தில் தவிக்கும் இந்தியா

- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கியது. அப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது.

அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 471 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ரிசப் பண்ட் 134, கேப்டன் 147 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, ஜோஸ் டாங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை 465 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக ஓலி போப் 106, ஹரி ப்ரூக் 99, பென் டக்கெட் 62 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

இந்தியா தோல்வி:

இந்தியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து 6 ரன்களை முன்னிலையாக பெற்றுக் கொடுத்தார். ஆனால் அடுத்ததாக விளையாடிய இந்தியா 364 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 137, ரிஷப் பண்ட் 118 ரன்களை எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் டாங், பிரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

இறுதியில் 371 ரன்களை துரத்திய இங்கிலாந்தை பென் டக்கெட் 149, ஜாக் கிராவ்லி 65, ஜோ ரூட் 53*, ஜேமி ஸ்மித் 44* ரன்களை அடித்து வெற்றி பெற வைத்தார்கள். இந்த தோல்விக்கு பேட்டிங்கில் நன்றாக ஃபினிஷிங் செய்யாததும் கேட்சுகளை தவற விட்டதும் முக்கிய காரணமானது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியை சந்தித்த முதல் அணியாக இந்தியா மோசமான உலக சாதனை படைத்தது.

- Advertisement -

கிங் கோலியின் அருமை:

2014இல் 7வது இடத்தில் தவித்த இந்தியாவை அபாரமாக கேப்டன்ஷிப் செய்த விராட் கோலி 2016 – 2021 வரை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார். அவரது தலைமையில் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இந்தியா வரலாறு காணாத வெற்றிகளைப் பெற்றது. குறிப்பாக 2021இல் இதே இங்கிலாந்தில் லார்ட்ஸ் போட்டியில் வெறும் 257 ரன்கள் இலக்கை வைத்து இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா மிரட்டலான வெற்றி பெற்றது.

ஆனால் இப்போட்டியில் 371 என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தும் இந்தியாவால் வெற்றி காண முடியவில்லை. இதையும் சேர்த்து கடைசி 9 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெறும் 1 வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அதுவும் பும்ரா தலைமையில் பெர்த்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கிடைத்தது. மற்ற 8 போட்டிகளில் இந்தியா தோல்விகளை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க: 430 நினைச்சோம்.. ஜெய்ஸ்வாலை மட்டும் குறை சொல்லல.. இந்தியாவின் தோல்விக்கு இதான் 2 காரணம்.. கேப்டன் கில் பேட்டி

மேலும் விராட் கோலி தலைமையில் இந்தியா 58.82% சராசரியில் வெற்றிகளை குவித்துள்ளது. ஆனால் விராட் கோலி பதவி விலகிய பின் மற்ற கேப்டன்கள் தலைமையில் இந்தியா 44.94% விகிதத்தில் மட்டுமே வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப காலங்களில் இந்தியா பாதாளத்தில் தவித்து வருகிறது. அதனால் இப்போது விராட் கோலியின் அருமை தெரிகிறதா? என்று அவரது ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement