உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியிலே வரலாறு படைத்த இந்திய அணி – விவரம் இதோ

IND
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் முதல் போட்டியான இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் வரலாற்று வெற்றியுடன் துவங்கியிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆண்டிகுவாவில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி வீரர்களான ராகுல், ரஹானே, கோலி, விஹாரி மற்றும் ஜடேஜா என அனைவரும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினார்கள் மேலும் பந்துவீச்சு டிபார்ட்மெண்டில் பும்ரா, ஷமி மற்றும் இஷாந்த் சர்மா என அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய அணியின் இந்த வெற்றி இனிவரும் போட்டிகளில் இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு உத்வேகமாக இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் தற்போது டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி தொடர்ச்சியாக அனைத்து அணிகளையும் அவரது நாடுகளில் வீழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய இந்திய அணியின் வெற்றி இந்திய அணிக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக பதிவாகியுள்ளது. அது யாதெனில் :

இந்த போட்டியின் வெற்றி இந்திய அணிக்கு வெளிநாடுகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றியாக பதிவாகி உள்ளது. அதாவது 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெளிநாடுகளில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக இது பதிவாகி உள்ளது. எனவே இந்திய அணி வீரர்கள் தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement