வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 18ஆம் தேதி துவங்குகிறது. கடந்த முறை இலங்கையில் நடைபெற்ற அந்தத் தொடர் இம்முறை ஓமன் நாட்டில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் இந்தியா ஏ அணி குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்தப் பிரிவில் பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளும் இடம் பிடித்துள்ளது.
குரூப் ஏ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபால் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த தொடரில் முதலாவதாக நடைபெறும் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒருமுறை மோதும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் செமி ஃபைனலுக்கு தகுதி பெறும். அதைத்தொடர்ந்து செமி ஃபைனல் வரும் அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்திய அணி அறிவிப்பு:
அதில் வெல்லும் 2 அணிகள் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு திலக் வர்மா கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி இந்தியாவுக்காக அறிமுகமான அவர் ஓரளவு நன்றாக செயல்பட்டார். அதனால் தற்போது இத்தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவரது தலைமையில் இளம் அதிரடி துவக்க வீரர் அபிஷேக் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர்களுடன் அனுஜ் ராவத், பிரப்சிம்ரன் சிங், ஆயுஷ் படோனி, நேஹல் வதேரா போன்ற இளம் பேட்ஸ்மேன்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சாய் கிஷோர் தேர்வு:
அதே போல ராகுல் சஹர், வைபவ் அரோரா அன்சுல் கம்போஜ், ரித்திக் ஷாக்கின் ஆகியோரும் பவுலிங் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் தமிழ்நாட்டிலிருந்து சுழல் பந்து வீச்சாளர் சாய் கிஷோர் மட்டும் தேர்வாகியுள்ளார். சமீபத்தில் புஜ்ஜி பாபு சிறப்பாக விளையாடிய அவர் ஐபிஎல் தொடரிலும் இந்திய அணிக்காகவும் தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க: என்னதான் 297 ரன்கள் அடிச்சாலும் கம்பீருக்கு நிச்சயம் இந்த விடயம் வருத்தமாகவே இருக்கும் – ஆகாஷ் சோப்ரா கருத்து
அதனால் இந்தியா ஏ அணிக்காக இத்தொடரில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. 2024 எமர்ஜிங் ஆசிய கோப்பைக்கான இந்தியா ஏ அணி:
திலக் வர்மா (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, அனுஜ் ராவத், ப்ரப்சிம்ரன் சிங், ஆயுஸ் பதோனி, நிஷாந்த் சிந்து, நேகல் வதேரா, ரமந்திப் சிங், ஆக்கிப் கான், அன்சுல் கம்போஜ், வைபவ் அரோரா, ரித்திக் ஷாக்கீன், தாய கிஷோர், ராகுல் சஹர், ரசிக் சலாம்



