வங்கதேச அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் குவித்து பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது. அதன் பின்னர் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் மட்டுமே குவித்ததால் 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.
கம்பீருக்கு கண்டிப்பாக வருத்தம் இருக்கும் :
இந்த போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி மிகப்பெரிய ரன் குவித்தது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. அதோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி தங்களது அதிகபட்ச ரன்களாக இந்த 297 ரன்களை பதிவு செய்துள்ளது.
என்னதான் இந்திய அணி இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 297 ரன்கள் குவித்து இருந்தாலும் அது இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீருக்கு மனநிறைவை அளித்திருக்காது என்று முன்னாள் அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்த போட்டியில் இந்திய அணி 297 ரன்கள் குவித்தது குறித்து நாம் பேச வேண்டியது உண்மையிலேயே மகிழ்ச்சி தான். ஆனாலும் இந்த போட்டியில் நிச்சயம் இந்திய அணியால் 300 ரன்களை குவித்து இருக்க முடியும் என்று கம்பீர் நினைத்திருப்பார். ஏனெனில் இதுவரை எந்த ஒரு அணியும் 300 ரன்களை நெருங்காத போது இந்திய அணிக்கு அந்த வாய்ப்பு இருந்தது.
ஆனாலும் மிடில் ஆர்டரில் சற்று எதிர்பாராத விக்கெட்டுகள் சரிந்ததால் ஏற்பட்ட தொய்வு காரணமாக 300 ரன்கள் அடிக்க முடியாமல் போனது. நிச்சயம் இந்த மூன்று ரன்கள் அடிக்கவில்லை என்ற குறை கௌதம் கம்பீர் மனதில் நிச்சயமாக இருக்கும். ஆனாலும் இந்திய அணி பெற்ற இந்த வெற்றி அவருக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சரவெடியாய் வெடித்த சாம்சன்.. சதமடித்த போது எழுந்து நின்று கைத்தட்டிய கம்பீர் – இதெல்லாம் எதுக்கு தெரியுமா?
இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே அபிஷேக் ஷர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருந்தாலும் அவருக்கு பின்னதாக வந்த அனைத்து வீரர்களுமே 200 ஸ்ட்ரைக் ரேட்டிற்கு மேல் விளையாடி அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



