- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இப்படியே போனா உ.கோ ஜெய்க்க முடியாது.. இந்தியாவுக்காக பாண்டியா என்ன செஞ்சுட்டாரு? பதான் விமர்சனம்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளது. அந்த அணியில் முதன்மை ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவாரா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே சிறப்பாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

குறிப்பாக அனைத்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக 4 ஓவர்களை வீசுவதற்கு தடுமாறும் அவர் விக்கெட்டுகளை எடுக்காமல் அதிக ரன்களை வாரி வழங்கிய வருகிறார். அதே போல இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் ஃபினிஷிங் செய்வதற்கும் தடுமாறி வருகிறார். அதனால் பாண்டியாவின் ஃபினிஷிங் பவர் குறைந்து விட்டதாக சமீபத்தில் முன்னாள் வீரர்கள் இர்பான் பதான் வெளிப்படையாக விமர்சித்திருந்தார்.

- Advertisement -

கடுமையான விமர்சனம்:
இருப்பினும் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்பதால் அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணி முதலில் பாண்டியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று இர்பான் பதான் விமர்சித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசிய பின்வருமாறு.

“ஹர்திக் பாண்டியாவுக்கு தற்போது கொடுக்கப்படும் பெரிய முக்கியத்துவத்தை இனிமேலும் கொடுக்கக் கூடாது என்பதில் இந்திய அணி தெளிவாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் இன்னும் நாம் உலகக் கோப்பையை வெல்லவில்லை. ஒருவேளை நீங்கள் அவரை உங்களுடைய முதன்மை ஆல் ரவுண்டராக கருதினால் பாண்டியா சர்வதேச கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்”

- Advertisement -

“அந்த வகையில் பார்க்கும் போது சர்வதேச அளவில் தற்போது பாண்டியா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவருடைய திறமையை பற்றி மட்டுமே நினைக்கும் நாம் ஐபிஎல் செயல்பாடுகளுக்கும் சர்வதேச செயல்பாடுகளுக்கும் இடையேயான வித்தியாசத்தில் குழப்பமடைந்துள்ளோம். முதலில் அவர் ஒரு வருடம் முழுவதும் தொடர்ச்சியாக விளையாட வேண்டும். விரும்பும் போது மட்டும் அவர் இந்தியாவுக்காக விளையாட முடியாது. அப்படி எப்போதாவது மட்டும் விளையாடும் ஒருவரை தேர்ந்தெடுப்பதை இந்தியா முதலில் நிறுத்த வேண்டும்”

இதையும் படிங்க: மும்பையை வெளுத்த 22 ஆஸி வீரர்.. யாருமே செய்யாத தெறி சாதனை.. 13 வருட ரெக்கார்ட்டை உடைத்த டெல்லி

“எனவே தனிநபர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை இந்திய அணி நிறுத்த வேண்டும். அதைச் செய்தால் உங்களால் ஐசிசி தொடர்களை வெல்ல முடியாது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் எப்போதுமே அணிக்கு முன்னுரிமை கொடுத்து சூப்பர் ஸ்டார்களை உருவாக்குகின்றனர். அவர்களின் அணியில் ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பதில்லை. அவர்கள் அணியில் இருக்கும் அனைவரும் சூப்பர் ஸ்டார்களாக உள்ளனர். நீங்களும் அதை செய்யாவிட்டால் உங்களால் பெரிய வெல்ல முடியாது” என்று கூறினார்.

- Advertisement -