- Advertisement -
ஐ.பி.எல்

இப்போவும் கெட்டுப்போகல.. 2024 டி20 உ.கோ தொடருக்கு இந்த தங்கத்தை கொண்டு போங்க.. ஹர்பஜன் கோரிக்கை

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான அந்த அணியில் விராட் கோலி, பும்ரா, ஜடேஜா, சூரியகுமார் யாதவ், ஜெய்ஸ்வால், சிவம் துபே உள்ளிட்ட அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் அந்த அணியில் தமிழக வீரர் நடராஜன் தேர்வு செய்யப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறிப்பாக முகமது சிராஜை விட சிறப்பாக விளையாடியும் அவருக்கு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை. அதே போல இளம் வீரர் ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மட்டுமே இடம் பிடித்துள்ளார். அதனால் மற்ற வீரர்கள் காயத்தை சந்திக்கும் பட்சத்தில் ரிங்கு சிங் 2024 டி20 உலகக் கோப்பை முதன்மை இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

ஹர்பஜன் கருத்து:
அதே போல சுப்மன் கில், ஆவேஷ் கான், கலீல் அஹ்மத் ஆகியோரும் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹைதராபாத் அணிக்காக அடித்து நொறுக்கி வரும் இளம் வீரர் அபிஷேக் ஷர்மாவை 2024 டி20 உலகக் கோப்பை இந்திய இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மே 8ஆம் தேதி லக்னோவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 166 ரன்களை துரத்திய ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ திணறலாக பேட்டிங் செய்த அதே அப்போட்டியில் வேறு பிட்ச்சில் விளையாடுவது போல் அடித்து நொறுக்கிய அபிஷேக் ஷர்மா 8 பவுண்டரி 6 சிக்சருடன் 75* (28) ரன்களும் டிராவிஸ் ஹெட் 89* (30) ரன்களும் அடித்து 9.4 ஓவரில் ஹைதராபாத்தை வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

அதைப் பார்த்து வியந்து போன ஹர்பஜன் சிங் இந்திய அணியின் பலத்தை அதிகரிப்பதற்காக இந்த தங்கத்தை டி20 உலகக் கோப்பைக்கு தூக்கிட்டு போங்க என்ற வகையில் அபிஷேக்கை பாராட்டியுள்ளார். இது அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஹைதராபாத்தில் என்ன நடக்கிறது. டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் சிக்ஸர்களை சிங்கிள் போல அசால்ட்டாக அடிக்கிறார்கள். அவர்களால் ஹைதராபாத் 165 ரன்களை 9.4 ஓவரில் சேசிங் செய்தது”

இதையும் படிங்க: இந்த தலைமுறையின் பெஸ்ட் பேட்ஸ்மேன்.. விராட் கோலியும் அதுக்கு தகுதியானாவர்.. யுவராஜ் சிங் கருத்து

“அணியின் பலத்தை அதிகரிப்பதற்காக அபிஷேக் ஷர்மாவை இந்தியா எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கூறினார். இந்த வருடம் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் அபிஷேக் சர்மா 401* ரன்களை 205.64 என்ற முரட்டுத்தனமான ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து வருகிறார். எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

- Advertisement -