6.3 ஓவர்.. 41 பந்தில் 50.. அடித்து நொறுக்கி இங்கிலாந்தின் பஸ்பாலுக்கு.. ஜெய்ஸ்பாலை காட்டிய ஜெய்ஸ்வால்.. மிரட்டும் இந்தியா

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்கியது. ஹைதராபாத் நகரில் காலை 9.30 மணிக்கு துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு ஜாக் கிராவ்லி 20, பென் டுக்கெட் 35, ஓலி போப் 1, ஜோ ரூட் 29, ஜானி பேர்ஸ்டோ 37, பென் போக்ஸ் 4 என பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்காமல் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் தரமாக செயல்பட்ட இந்தியா சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3, ரவீந்திர ஜடேஜா 3, ஜஸ்ப்ரித் பும்ரா 2, அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

இந்தியாவின் ஜெயிஸ்பால்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் இளம் வீரர் யாசஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலிருந்தே இங்கிலாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு வேகமாக ரன்களை சேர்த்தார். அந்த வகையில் பட்டையை கிளப்பிய அவர் வெறும் 6.3 ஓவரில் இந்தியாவை 41 பந்தில் 50 ரன்கள் தாண்ட வைத்து அற்புதமான துவக்கத்தை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

இருப்பினும் அவருடன் 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் சற்று தடுமாற்றமாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களில் ஜாக் லீச் சுழலில் சிக்கினார். ஆனால் எதிர்ப்புறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் அரை சதம் கடந்து இங்கிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

அப்போது வந்த சுப்மன் கில் தன்னுடைய பங்கிற்கு தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் இந்த பக்கம் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால் அமர்க்களமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் முதல் நாள் முடிவில் 119 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் இங்கிலாந்தை விட வெறும் 127 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது.

இதையும் படிங்க: 2 நாளில் மேட்ச் முடிஞ்சுரும் போலயே.. கணிப்பை பொய்யாக்கிய இந்தியா.. இங்கிலாந்தால் அவமானப்பட்ட பீட்டர்சன்.. கலாய்க்கும் ரசிகர்கள்

களத்தில் கில் 14*, ஜெயிஸ்வால் 76* ரன்களுடன் உள்ளனர். குறிப்பாக இந்த தொடரில் பஸ்பால் எனப்படும் தங்களுடைய டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போன்ற அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை அடித்து நொறுக்குவோம் என்று இங்கிலாந்து அணியினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் கடைசியில் முதல் நாளிலேயே ஆல் அவுட்டான இங்கிலாந்தை இதுவரை 9 பவுண்டரி 3 சிக்சருடன் 108.57 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து நொறுக்கி வரும் ஜெய்ஸ்வால் பதிலடி கொடுத்து ஜெயிஸ்பாலை காண்பித்து வருவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement