IND vs ENG : பதவியேற்ற முதல் போட்டியிலேயே பும்ரா தலைமையில் இந்திய அணி படைத்த பிரமாண்ட சாதனை

Jasprit Bumrah Team India
- Advertisement -

பர்மிங்காம் நகரில் ஜூலை 1-ஆம் தேதியன்று தொடங்கிய 5-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. கடந்த வருடம் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகளில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து இந்தியா முன்னிலை பெற்ற போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி தற்போது நடைபெறுகிறது. அந்த நிலையில் தனது முதல் பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் 17, புஜாரா 13, விஹாரி 20, விராட் கோலி 11, ஷ்ரேயஸ் ஐயர் 11 என டாப் 5 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

Rishabh Pant Ind vs ENg Ravindra Jadeja

- Advertisement -

அதனால் 98/5 என ஆரம்பத்திலேயே திணறிய இந்தியாவுக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்து நங்கூரமாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் – ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்தியாவை தூக்கி நிறுத்த போராடினார்கள். அதில் ஒருபுறம் ஜடேஜா மெதுவாக பேட்டிங் செய்ய மறுபுறம் டி20 இன்னிங்ஸ் போல பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்ட ரிஷப் பண்ட் இங்கிலாந்து பவுலர்களை சரமாரியாக அடித்து வெறும் 89 பந்துகளில் சதமடித்தார். ஜடேஜாவுடன் 6-ஆவது விக்கெட்டுக்கு 222 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்திய இந்த ஜோடியில் 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 146 (111) ரன்களை 131.53 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட ரிஷப் பண்ட் ரசிகர்களை மகிழ்வித்து ஆட்டமிழந்தார்.

ஜடேஜா அபாரம் – பும்ரா மாஸ்:
அதனால் தப்பிய இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 338/7 என்ற நல்ல நிலைமைக்கு போராடி வந்தது. அதை தொடர்ந்து இன்று துவங்கிய 2-வது நாளில் முகமது சமி 16 ரன்களில் அவுட்டானாலும் 83* ரன்களுடன் களத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு வெளியே தனது முதல் சதத்தை அடித்து 104 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்தின் நட்சத்திரம் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84-ஆவது ஓவரில் 4, 5, 7, 4, 4, 4, 6, 1 என 2 நோ-பால் பந்துகளிலும் அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு மொத்தமாக 35 ரன்களை தெறிக்க விட்டார்.

Stuart Broad Yuvraj SIngh Jasprit bumrah

அதனால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மென் என்ற ஜாம்பவான் பிரையன் லாரா, கேஷவ் மஹராஜ், ஜார்ஜ் பெய்லி (தலா 28 ரன்கள்) ஆகியோரின் உலக சாதனையை தூள் தூளாக்கிய ஜஸ்பிரித் பும்ரா புதிய உலக சாதனை படைத்தார். 2007இல் நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவின் யுவராஜ் சிங்குக்கு எதிராக 6 பந்துகளில் 6 சிக்சர்களை கொடுத்து 36 ரன்களை வாரி வழங்கிய அதே ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 550 விக்கெட்டுகளை எடுத்து தரமான பவுலராக இருந்தபோதிலும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற 10-வது இடத்தில் களமிறங்கிய பேட்ஸ்மேனிடம் இப்படி அடி வாங்கி மோசமான உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

பயம் தெளிந்தது:
இறுதிவரை ஜஸ்பிரித் பும்ரா 31* (17) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க மறுபுறம் சிராஜ் ஆட்டமிழந்ததால் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 416 ரன்களை போராடி எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார். முன்னதாக இப்போட்டியில் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் வலுவான அணியாக மாறியுள்ள இந்தியாவை புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா சமாளித்து 2007க்கு பின் இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு டெஸ்ட் தொடரை வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Jasprith Bumrah India

ஆனால் கடைசி நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டு அவர் விலகிய நிலையில் ஒரு வேகப்பந்து வீச்சாளராக அதுவும் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் களமிறங்கிய இந்தியா இப்போட்டியில் வெல்லுமா என்ற பயம் இந்திய ரசிகர்களிடம் காணப்பட்டது. இருப்பினும் அவரது தலைமையில் அற்புதமாக பேட்டிங் செய்த இந்தியா 412 ரன்கள் எடுத்து முதல் நாளிலிருந்தே போராட துவங்கியுள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய தெம்பைக் கொடுத்தது.

- Advertisement -

அதைவிட இப்போட்டியில் 98/5 என தடுமாறிய இந்தியா 200 ரன்களை தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 412 ரன்களை எடுத்தது. ஒரு வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் 100 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தும் 400 ரன்களை இந்தியா போராடி எடுத்தது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

Bumrah Captain

இதற்கு முன் 1983 மற்றும் 2013 ஆகிய வருடங்களில் சொந்த மண்ணில் மட்டுமே இந்தியா அதுபோல் போராடி 400 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் இம்முறை முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் அதுவும் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் முதல் போட்டியிலேயே இந்த பிரம்மாண்ட வரலாற்றை இந்தியா எழுதியுள்ளது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும்.

இதையும் படிங்க : IND vs ENG : அன்று யுவராஜ்.. இன்று பும்ரா.. ஒரே ஓவரில் மோசமான உலகசாதனைக்கு சொந்தக்காரரான – இங்கி வீரரின் அவலம்

அந்த முழு பட்டியல் இதோ:
1. 92/5 – 451, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, சென்னை, 1983
2. 83/5 – 453, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, கொல்கத்தா, 2013
3. 98/5 – 413, இங்கிலாந்துக்கு எதிராக, பர்மிங்காம், 2022*

Advertisement