- Advertisement -
இந்திய கிரிக்கெட்

356 ரன்ஸ்.. இங்கிலாந்தை அடித்த கோலி, ஸ்ரேயாஸ், ராகுல்.. அம்லா, தவானை முந்திய கில் உலக சாதனை

அகமதாபாத் நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 12ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு துவங்கியது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை முதலிரண்டு போட்டிகளை வென்று ஏற்கனவே இந்தியா கைப்பற்றி விட்டது. அந்த சூழ்நிலையில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதை அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கடந்தப் போட்டியில் சதத்தை அடித்த கேப்டன் ரோஹித் சர்மா ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தம்முடைய ஸ்டைலில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார்.

- Advertisement -

கில் அசத்தல்:

அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வலுப்படுத்திய அந்த ஜோடியில் விராட் கோலி அரை சதத்தை அடித்து கொஞ்சம் ஃபார்முக்கு திரும்பி 52 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய கில் அரை சதத்தை கடந்து பேட்டிங் செய்தார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடினார்.

அவருடன் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கில் சதத்தை அடித்து 14 பவுண்டரி 3 சிக்ஸருடன் 112 (102) ரன்கள் அடித்த போது அடில் ரசித் சுழலில் அவுட்டானார். அதே போல மறுபுறம் அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 78 (64) ரன்களில் அவுட்டானார். அவரை காலி செய்த அடில் ரசித் அடுத்ததாக வந்த பாண்டியாவையும் 17 ரன்களில் போல்டாக்கினார்.

- Advertisement -

கில் உலக சாதனை:

அதற்கடுத்தாக வந்த கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி 40 (29) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் அக்சர் படேல் 13, வாஷிங்டன் சுந்தர் 14, ஹர்ஷித் ராணா 13 ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 356 ரன்கள் குவித்தது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக அடில் ரசித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதையும் படிங்க: 356 ரன்ஸ்.. இங்கிலாந்தை அடித்த கோலி, ஸ்ரேயாஸ், ராகுல்.. அம்லா, தவானை முந்திய கில் உலக சாதனை

இந்த சதத்தையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 7 சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஷிகர் தவான் (54 இன்னிங்ஸ்) சாதனையை சுப்மன் கில் (50 இன்னிங்ஸ்) முறியடித்தார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 இன்னிங்ஸ்களுக்கு பின் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார். அந்தப் பட்டியல்:
1. சுப்மன் கில்: 2503*
2. ஹாசிம் அம்லா: 2486
3. இமாம்-உல்-ஹக்: 2386

- Advertisement -