இந்திய அணி வெற்றியை தொடர்ந்து வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல் – விவரம் இதோ

Ind

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து உலக செஸ் சாம்பியன்ஷிப் புதிய பட்டியல் வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது.

Jadeja-1

இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு இன்னிங்சிலும் அபார பேட்டிங் செய்து தென்ஆப்பிரிக்கா அணி 203 ரன்கள் என்ற பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்த தொடரில் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு 40 புள்ளிகள் கிடைத்துள்ளன.

எனவே இதை அடுத்து புதிதாக வெளியாகியுள்ள சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் துவங்கி 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் இந்திய அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.#

ashwin 1

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 60 பள்ளிகளில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க அணி இன்னும் புள்ளி கணக்கை துவங்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.