IND vs WI : இரவோடு இரவாக வென்ற இந்தியா – வெஸ்ட் இண்டீஸை சொந்த மண்ணில் சுக்கு நூறாக்கி 3 வரலாற்று சாதனை

IND vs WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 12ஆம் தேதி டாமினிகா நகரில் துவங்கியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்த தொடரில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் வெறும் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அறிமுகமாக போட்டியில் சவாலை கொடுத்த இளம் வீரர் அலிக் அதனேஷ் 47 ரன்கள் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

Siraj

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதமடித்து 103 ரன்கள் குவித்தார். மறுபுறம் அறிமுகப் போட்டியில் அட்டகாசமாக செயல்பட்ட ஜெய்ஸ்வால் 229 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து அறிமுக போட்டியிலேயே சதமடித்த 17வது இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்று 171 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்தியா சாதனை வெற்றி:
அவர்களைத் தொடர்ந்து சுப்மன் கில் 6, ரகானே 3 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 76 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 37 ரன்களும் எடுத்த போது 421/5 ரன்களுடன் இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கிமர் ரோச், அல்சாரி ஜோசப், கார்ன்வால், வேரிக்கன், அதனேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 271 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் முன்பை விட மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 130 ரன்களுக்கு சுருண்டது.

Team India

அதிகபட்சமாக மீண்டும் இளம் வீரர் அலிக் அதனேஷ் 28 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகளி சாய்த்தார். அதனால் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (2) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இப்போட்டி 4வது நாள் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய நேரப்படி நள்ளிரவில்லையே தங்களுடைய தரத்தை காட்டி வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா சுருட்டி பெரிய வெற்றியை சுவைத்து 2025 பெஸ்ட் சாம்பியன்ஸ் புள்ளி பட்டியலில் முதல் வெற்றியுடன் முதலிடம் பிடித்தது.

- Advertisement -

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் பலவீனமான அணி என்பதையும் இந்தியா தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது என்பதையும் இந்த முடிவு காட்டுகிறது என்றே சொல்லலாம். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி தன்னுடைய அறிமுக போட்டியிலேயே ஏராளமான சாதனைகள் படைத்து 171 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதை விட இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியாவுக்கு வெளியே மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்து இந்தியா சாதனை படைத்தது.

Ashwin

1. இதற்கு முன் கடந்த 2016இல் ஆன்ட்டிகுவா நகரில் 92 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனையாகும். அந்த விரிவான பட்டியல் இதோ:
1. இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, டாமினிக்கா, 2023*
2. இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, ஆண்ட்டிகுவா, 2016
3. இன்னிங்ஸ் மற்றும் 90 ரன்கள் – ஜிம்பாப்பேவுக்கு எதிராக, புலவாயோ, 2005
4. இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் – இங்கிலாந்துக்கு எதிராக, லீட்ஸ், 2002
5. இன்னிங்ஸ் மற்றும் 2 ரன்கள் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, சிட்னி, 1978

- Advertisement -

2. அதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 10வது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வென்றுள்ள இந்தியா வெளிநாட்டு மண்ணில் தன்னுடைய அதிக வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் : 10*
2. ஆஸ்திரேலியா/இங்கிலாந்து/இலங்கை மண்ணில் : தலா 9
3. வங்கதேச மண்ணில் : 8
4. நியூசிலாந்து மண்ணில் : 5
5. தென்னாபிரிக்க மண்ணில் : 4

Jaiswal IND vs WI

இதையும் படிங்க:வீடியோ : அறிமுக மேட்ச்லயே தடை வேணுமா – பொறுப்பற்ற இஷான் கிசானை விளாசும் ரசிகர்கள் – நடந்தது என்ன?

3. மேலும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 3 போட்டிகளில் முதல் முறையாக தொடர் வெற்றிகளை பதிவு செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. 2019இல் ஆண்டிகுவாவில் 318 ரன்கள் வித்தியாசத்திலும் கிங்ஸ்டனில் 257 ரன்கள் வித்தியாசத்திலும் வென்ற நிலையில் தற்போது ஹாட்ரிக் முறையாக வென்றுள்ளது.

Advertisement