297 ரன்ஸ்.. அடித்து நொறுக்கிய சஞ்சு – சூர்யகுமார்.. வங்கதேசத்தை சூறையாடிய இந்தியா.. புதிய உலக சாதனை

IND vs BAN
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற முதலிரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகள் பெற்று கோப்பையை கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து சம்பிரதாயக் கடைசி போட்டி அக்டோபர் 12ஆம் தேதி ஹைதராபாத் நகரில் இரவு 7 மணிக்கு துவங்கியது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு அபிஷேக் சர்மா ஆரம்பத்திலேயே 4 ரன்களில் அவுட்டானார்.

ஆனால் அவருக்கும் சேர்த்து எதிர்ப்புறம் சஞ்சு சாம்சன் வங்கதேச பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டார். குறிப்பாக முதலிரண்டு போட்டிகளில் பெரிய ரன்கள் எடுக்காததால் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்த அவர் அதற்கும் சேர்த்து இப்போட்டியில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கினார். அவருடன் எதிர்புறம் கேப்டன் சூரியகுமார் ஜோடி சேர்ந்த தம்முடைய ஸ்டைலில் ரன்களை குவித்தார்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் மிரட்டல்:

அந்த வகையில் பட்டாசாக விளையாடிய இந்த ஜோடியில் ரிசாத் ஹுசைன் வீசிய பத்தாவது ஓவரில் சஞ்சு சாம்சன் 0, 6, 6, 6, 6, 6 என அடுத்தடுத்த 5 சிக்ஸர்களை பறக்க விட்டு 30 ரன்கள் குவித்தார். அதே வேகத்தில் பட்டாசாக விளையாடிய அவர் 40 பந்துகளில் 250 ஸ்ட்ரைக் ரேட்டில் சதத்தைத் தொட்டு சஞ்சு சாம்சன் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து அசத்திய அவர் 11 பவுண்டரி 8 சிக்ஸருடன் 111 (47) ரன்களை 236.17 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி ரசிகர்களின் பாராட்டுக்கு மத்தியில் அவுட்டாகி சென்றார். அவருடன் மறுபுறம் 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் சூர்யகுமார் தம்முடைய ஸ்டைலில் 8 பவுண்டரி 5 சிக்சர்களை 75 (35) ரன்களை விளாசி அவுட்டானார்.

- Advertisement -

உலக சாதனை:

அடுத்ததாக வந்த ரியான் பராக் தம்முடைய பங்கிற்கு ஒரு பவுண்டரி 4 சிக்சருடன் 34 (13) ரன்களை விளாசி அவுட்டானார். இறுதியில் ஹரிதிக் பாண்டியா தனது பங்கிற்கு அதிரடியாக 4 பவுண்டரி 4 சிக்சருடன் 47 (18), ரிங்கு சிங் 8* (4) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் இந்தியா 297-6 ரன்கள் குவித்தது.
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முழு அந்தஸ்து பெற்ற நாடுகளுக்கு மத்தியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக இந்தியா உலக சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: வெறும் 43 பந்துகள் தான்.. டி20 கிரிக்கெட்டில் இரட்டை சாதனையை நிகழ்த்தி அசத்திய இந்திய அணி – விவரம் இதோ

இதற்கு முன் 2019ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 278-3 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனை. அத்துடன் ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து இந்தியா சாதனை. முதலிடத்தில் நேபால் (314-3, மங்கோலியாவுக்கு எதிராக, 2023) உள்ளது. வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக தன்சிம் ஹசன் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Advertisement