வெறும் 43 பந்துகள் தான்.. டி20 கிரிக்கெட்டில் இரட்டை சாதனையை நிகழ்த்தி அசத்திய இந்திய அணி – விவரம் இதோ

Samson
- Advertisement -

வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது அக்டோபர் 12-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த போட்டியில் இரட்டை சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளது.

இரட்டை சாதனையை நிகழ்த்தி இந்தியா அசத்தல் :

அந்த வகையில் போட்டியின் முதல் ஓவரில் இருந்தே பவுண்டரியும், சிக்ஸர்களுமாக இந்திய அணி வெளுத்து வாங்கியது. இருப்பினும் துவக்க வீரரான அபிஷேக் சர்மா 4 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய வேளையில் அடுத்ததாக சஞ்சு சாம்சன் மற்றும் அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஜோடி இணைந்தது.

- Advertisement -

அதன்பிறகு அவர்கள் இருவரது சரவெடியான ஆட்டத்தின் மூலம் தான் இந்த இரட்டை சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரத்தை இந்த பதிவில் காணலாம். அந்த வகையில் இந்த போட்டியின் போது துவக்கத்திலிருந்து பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய இந்திய வீரர்கள் முதல் 6 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 82 ரன்களை குவித்தனர்.

இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி பவர்பிளே ஓவர்களில் தங்களது அதிக ரன்களை பதிவு செய்து அசத்தியுள்ளது. இதற்கு முன்னதாக ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக துபாயில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது 82 ரன்கள் குவித்து இருந்தாலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

- Advertisement -

ஆனால் இன்றைய போட்டியில் 82 ரன்கள் குவித்து இருந்தாலும் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தால் பவர் பிளேவில் இந்திய அணி அடித்த அதிகபட்ச ஸ்கோராக இது பதிவாகியுள்ளது. அதோடு இந்த போட்டியின் ஏழாவது ஓவர் முடிந்து எட்டாவது ஓவரின் முதல் பந்தில் அதாவது 43-வது பந்தில் இந்திய அணி மொத்தமாக 100 ரன்கள் கடந்தது.

இதையும் படிங்க : டீம் பஸ்ஸில் கூட ஏறாமல் ஹோட்டல் அறையிலேயே தங்கிய இந்திய வீரர் ஹர்ஷித் ராணா – என்ன நடந்தது?

இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 ரன்களை அடித்து தங்களது அணி சார்பாக அந்த சாதனையையும் பதிவு செய்துள்ளது. இப்படி வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி இன்றைய ஒரே போட்டியில் இரட்டை சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement