IND vs IRE : 2வது போட்டியில் இந்தியாவும், முக்கிய பவுலர்களும் படைத்த மோசமான சாதனைகள் இதோ

Team India Dinesh Karthik Ishan Kishan
- Advertisement -

அயர்லாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வந்த 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவு பெற்றுள்ளது. ஜூன் 26இல் டப்ளின் நகரில் துவங்கிய முதல் போட்டியில் ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்ப்பதற்காக ஜூன் 28-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் முழு மூச்சை கொடுத்து போராடிய அயர்லாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் ஏமாற்றத்துடன் தோற்றது.

Sanju Samson

- Advertisement -

இரவு 9 மணிக்கு துவங்கி அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து 20 ஓவர்களில் சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 225/7 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு நீண்ட நாட்கள் கழித்து வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சனுடன் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிசான் 3 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தாலும் அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்டார். பவர்பிளே ஓவர்கள் முடிந்து 10 ஓவர்கள் கடந்தும் ஓவருக்கு 10 ரன்களை தெறிக்கவிட்ட இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தது.

போராடிய அயர்லாந்து:
அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு விக்கெட் எடுக்கும் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடியாக புதிய சாதனை படைத்த இவர்களில் 9 பவுண்டரி 4 சிக்சர்கள் 77 (42) ரன்களில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ் அதிரடியாக 15 (5) ரன்கள் எடுத்து அவுட்டாக அதே ஓவரிலேயே 9 பவுண்டரி 6 சிக்சருடன் தனது முதல் சதத்தை அடித்த தீபக் ஹூடா 104 (57) ரன்கள் எடுத்து கடைசியில் அவுட்டானார். அயர்லாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக மார்க் அடைர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 226 என்ற இலக்கை துரத்திய அயர்லாந்தும் ஆரம்பம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு சவால் கொடுத்தது.

Harry Tector

பவர்பிளே ஓவரில் பட்டைய கிளப்பிய அந்த அணிக்கு 72 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஆண்டி பால்பிரின் – பால் ஸ்டெர்லிங் ஜோடியில் 5 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்கவிட்ட ஸ்டெர்லிங் 40 (18) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கெரத் டிலானி டக் அவுட்டாகி ஏமாற்றினார். மறுபுறம் 3 பவுண்டரி 7 சிக்சருடன் 60 (37) ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடிய கேப்டன் பால்பிரின் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அந்த நேரத்தில் வந்த டுக்கர் 5 (9) ரன்களில் அவுட்டாகி சென்றாலும் 5 பவுண்டரியுடன் ஹென்றி டெக்டர் 39 (28) ரன்கள் எடுத்து போராடி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதிர்ஷ்டம் இல்லை:
இருப்பினும் கடைசி நேரத்தில் டாக்றேல் – மார்க் அடைர் ஆகியோர் அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டதால் வெற்றியை நெருங்கிய அயர்லாந்துக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அதை வீசிய இளம் இந்திய வீரர் உம்ரான் மாலிக்கு எதிராக 0, 1 நோபால், 4, 4, 1, 1 பைஸ்,1 என 12 ரன்களை மட்டுமே எடுத்த அந்த அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அந்த அணிக்கு மார்க் அடைர் 23* (12) ரன்கள் ஜார்ஜ் டாக்ரெல் 34* (16) ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்து விடலாம் என்று முழுமூச்சாய் போராடிய போதிலும் வெற்றியை பெறமுடியவில்லை.

IND vs IRE Umran Malik

இந்த த்ரில் வெற்றியால் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும் ஹர்திக் பாண்டியா தலைமையில் அயர்லாந்தை சொந்த மண்ணில் தோற்கடித்து அசத்தியுள்ளது. இருப்பினும் இப்போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு படு மோசமாக இருந்த நிலையில் அதிர்ஷ்டத்தால் தப்பியதாக கூறும் இந்திய ரசிகர்கள் இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு தகுதியாக அற்புதமாக பேட்டிங் செய்து போராடிய அயர்லாந்து இந்தியாவின் மோசமான பந்து வீச்சை அம்பலப்படுத்தி விட்டதாக கூறுகின்றனர். அதற்கேற்றாற்போல் வென்றாலும் இப்போட்டியில் இந்தியா மார்தட்ட முடியாத அளவுக்கு செய்த மோசமானால் சாதனைகளை பார்ப்போம்:

- Advertisement -

மார்த்தாட்ட வேண்டாம்:
1. முதலில் பேட்டிங்கில் தீபக் ஹூடா அவுட்டானதும் வந்த தினேஷ் கார்த்திக் 0 (1), அக்சர் பட்டேல் 0 (1), ஹர்ஷல் படேல் 0 (1) ஆகிய 3 இந்திய வீரர்கள் அயர்லாந்தின் கடைசிநேர அற்புதமான பந்துவீச்சில் அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட்டானார்கள். அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு போட்டியில் இந்தியா 3 கோல்டன் டக் அவுட்களை அயர்லாந்து போன்ற கத்துக்குட்டிக்கு எதிராக பதிவு செய்து பரிதாபத்திற்கு உள்ளாகியுள்ளது.

Bhuvi 1

2. இப்போட்டியில் 226 ரன்கள் இலக்கை துரத்திய அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே 18 ரன்களை பறக்கவிட்டார். அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் ஓவரில் அதிக ரன்களை கொடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற பரிதாப சாதனையை புவனேஷ் குமார் நேற்று படைத்தார்.

இதையும் படிங்க : IND vs IRE : ராகுல், ரெய்னாவை முந்தி தீபக் ஹூடா படைத்த வரலாற்று சாதனைகளின் பட்டியல் இதோ

3. அத்துடன் துல்லியமாக பந்து வீசுவதற்கு பெயர்போன ஹர்ஷல் படேல் இப்போட்டியில் 54 ரன்களை வாரி வழங்கினார். அதுவும் 6 சிக்சர்களை கொடுத்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக சிக்சர்களை கொடுத்த முதல் இந்திய பவுலர் என்ற பரிதாபத்திற்கு உள்ளானார்.

Advertisement