IND vs ZIM : கடைசி 5 ஓவர்களில் ஜிம்பாப்வே அணியை பொளந்து கட்டிய இந்திய வீரர்கள் – இமாலய இலக்கு நிர்ணயம்

Ind vs ZIm Suryakumar Yadav Sikander Raza
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்று உச்ச கட்டத்தை எட்டியுள்ளன. அதில் ஏற்கனவே ஆஸ்திரேலியா வெளியேறிய நிலையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் குரூப் 1 பிரிவிலிருந்து அரை இறுதிக்கு தகுதி பெற்று அசத்தின. அந்த நிலையில் நவம்பர் 6ஆம் தேதியன்று நடைபெற்ற 40வது போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் தென் ஆப்பிரிக்காவை நெதர்லாந்து தோற்கடித்ததால் அதிர்ஷ்டமாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய பாகிஸ்தான் தன்னுடைய கடைசி போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்று ஆச்சரியத்தை கொடுத்தது. அதே சமயம் தென்னாப்பிரிக்கா வெளியேறியதால் ஏற்கனவே 3வது அணியாக தகுதி பெற்ற இந்தியா தன்னுடைய கடைசி சம்பிரதாய போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 15 (13) ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றினார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற மற்றொரு தொடக்க வீரர் கேஎல் ராகுலுடன் கை கோர்த்த விராட் கோலி 2வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினாலும் 2 பவுண்டரியுடன் 26 (25) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

- Advertisement -

பொளந்து கட்டிய இந்தியா:
ஆனால் மறுபுறம் அட்டகாசமாக செயல்பட்ட கேஎல் ராகுல் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் அரை சதமடித்து 51 (35) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய ரிசப் பண்ட் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் 3 (5) ரன்கள் அவுட்டாகி சொதப்பினார். அதனால் 101/4 என தடுமாறிய இந்தியாவை வழக்கம் போல 4வது இடத்தில் களமிறங்கி சுழன்றடித்த சூரியகுமார் 5வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுப்படுத்தினார்.

ஆனால் அவருடன் விளையாடிய ஹர்திக் பாண்டியா கடைசி வரை அதிரடியை துவக்காமல் 2 பவுண்டரியுடன் கடைசி ஓவரில் 18 (18) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற சூரியகுமார் யாதவ் கடைசியில் அதிரடியை மேலும் அதிகப்படுத்தி 2 பவுண்டரின் 4 சிக்ஸர்களை பறக்க விட்டு 61* (25) ரன்களை 244.00 என்ற தெறிக்க விடும் ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து அபார பினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் ஜிம்பாப்பேவை அடித்து நொறுக்கிய இந்தியா 186/5 என்ற பெரிய ரன்களை குவித்துள்ளது. ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

முன்னதாகவே அப்போட்டியில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டானதால் மிடில் ஓவர்களில் தடுமாறிய இந்தியா 15 ஓவர்களில் வெறும் 107/4 ரன்கள் மட்டுமே எடுத்து 160 ரன்களை கூட தாண்டுமா என்ற பரிதாப நிலையில் இருந்தது. ஆனால் கடைசி 5 ஓவரில் ஜிம்பாப்வே பவுலர்களை பொளந்து கட்டிய இந்தியா 79 ரன்களை விளாசி அடித்து நொறுக்கியது. அதில் அதிகப்படியான ரன்களை குவித்த சூரியகுமார் யாதவ் கடைசி ஓவரில் மட்டும் 18 ரன்களை விளாசி பண்ட், பாண்டியா ஆகியோரது சொதப்பலை சமாளித்து இந்தியாவின் ஃபினிஷராக செயல்பட்டார்.

Advertisement