- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுதர்சனை வைத்து 93 வருட இந்திய வரலாற்றில் நிகழாத அரிய முடிவை எடுத்த கில்.. மான்செஸ்டரில் சாதிப்பாரா?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகிறது. அத்தொடரின் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் இருக்கும் ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் துவங்கியது. 3வது போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரில் முன்னிலையில் இருக்கிறது.

அந்த சூழ்நிலையில் மதியம் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கிய 4வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், நிதிஷ் ரெட்டி ஆகியோர் வலைப்பயிற்சி செய்யும் போது காயத்தை சந்தித்தார்கள்.

- Advertisement -

வரலாற்றில் நிகழாத அணி:

எனவே கடந்தப் போட்டியில் விளையாடிய ஆகாஷ் தீப்புக்கு பதிலாக 24 வயது இளம் வீரர் அன்சுல் கம்போஜ் அறிமுகமாக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். அதே போல நித்திஷ் ரெட்டிக்கு பதிலாக சர்துள் தாக்கூர் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். அத்துடன் முதல் 3 போட்டிகளில் அரை சதத்தை கூட அடிக்காத கருண் நாயர் நீக்கப்பட்டு தமிழக வீரர் சாய் சுதர்சன் மீண்டும் வாய்ப்பு பெற்றார்.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் அறிமுகமான அவர் டக் அவுட்டாகி பின்னர் 30 ரன்கள் எடுத்தார். இருப்பினும் கருண் நாயரை 3வது இடத்தில் விளையாட வைப்பதற்காக அவரை இந்திய அணி அறிமுகப் போட்டியுடன் கழற்றி விட்டது. ஆனால் அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தத் தவறியதைத் தொடர்ந்து சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -

மான்செஸ்டரில் வெற்றி கிடைக்குமா:

அவரையும் சேர்த்து இப்போட்டியில் யசஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, வாசிங்டன் சுந்தர் என 5 இடது கை பேட்ஸ்மேன்கள் இந்தியாவுக்காக விளையாடத் தேர்வாகியுள்ளார்கள். இப்படி ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா 5 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்குவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். 1932ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் இந்திய அணிக்கு இதற்கு முன் எந்த போட்டியிலும் 5 இடது கை பேட்ஸ்மேன்கள் விளையாடியதில்லை.

இதையும் படிங்க: 78 ரன்ஸ்.. இந்தியாவுக்காக 1946க்குப்பின் 79 வருடங்கள் கழித்து கில் – ஜெய்ஸ்வால் ஜோடி மான்செஸ்டரில் அபார சாதனை

அப்படிப்பட்ட வரலாற்றில் நிகழாத அரிய முடிவை கேப்டன் கில் பயிற்சியாளர் கம்பீர் இப்போட்டியில் எடுத்துள்ளார்கள். வரலாற்றில் மான்செஸ்டர் மைதானத்தில் இந்தியா ஒருமுறை கூட வெற்றி பெற்றது கிடையாது. எனவே வரலாற்றில் விளையாடாத அரிய அணியை தேர்ந்தெடுத்துள்ள இந்தியா புதிய முயற்சியில் மான்செஸ்டரில் முதல் முறையாக இங்கிலாந்தை தோற்கடித்து சரித்திர வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -