IND vs BAN : இன்று வாழ்வா ? சாவா ? ஆட்டத்தில் பங்களாதேஷ். வெற்றி பெறுமா இந்திய அணி ?

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளையும் ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி மழை காரணமாக ரத்து என 11 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது

Ind-vs-Ban
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளையும் ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி மழை காரணமாக ரத்து என 11 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Ind vs ban 1

இந்நிலையில் இன்று இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தற்போது 11 புள்ளிகளுடன் இருப்பதால் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்போடு விளையாடும்.

- Advertisement -

அதேபோன்று பங்களாதேஷ் அணியும் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி 3 தோல்வியுடன் ஒரு முடிவு இல்லை என 7 புள்ளிகளுடன் இருப்பதால் இந்தப் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய கட்டாய வெற்றி தேவைப்படுவதால் வாழ்வா சாவா போட்டியில் ஆட உள்ளது. இதனால் இரண்டு அணி ரசிகர்களுக்கும் இந்த போட்டி விருந்தாக அமையும் என்பதை மறுக்க முடியாது.

ind

வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசன் பேட்டிங் மற்றும் பவுலிங் என சிறப்பாக விளையாடி வருகிறார். அதேபோன்று இந்திய அணியிலும் ரோஹித், கோலி, பும்ரா மற்றும் பாண்டியா போன்றவர்கள் சிறப்பாக ஆடி வருவதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இதுவரை இந்திய அணி பங்களாதேஷ் அணியை 35 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன அதில் இந்திய அணி 29 முறையும் பங்களாதேஷ் அணி 5 முறையும் ஒரு ஆட்டம் முடிவின்றி போனது குறிப்பிடத்தக்கது.

Advertisement