- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நாங்களும் இதைத் தான் எதிர்பாத்தோம்.. முதல் தெ.ஆ டி20.. இந்திய பிளேயிங் லெவன் அறிவித்த சூரியகுமார்

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. கடைசியாக டி20 உலகக் கோப்பை ஃபைனலில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அந்த உத்வேகத்துடன் சமீபத்திய நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்வியில் இருந்து மீண்டெழுந்து இத்தொடரில் வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியுள்ளது.

குறிப்பாக இத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இளம் வீரர்களுடன் இத்தொடரில் விளையாடுகிறது. அந்த நிலையில் இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் எட்டாம் தேதி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

இந்திய அணி:

இருப்பினும் தாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பியதாக இந்திய கேப்டன் சூரியகுமார் தெரிவித்தார். எனவே டாஸ் இழந்தது பெரிய விஷயமல்ல என்று சூரியகுமார் கூறினார். இந்திய அணியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சமீபத்திய வங்கதேச தொடரில் அசத்தியதால் மீண்டும் வாய்ப்பு பெற்றார். அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக வாய்ப்பு பெற்றனர்.

அதே போல பேட்டிங் துறையில் சமீபத்தில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் மீண்டும் துவக்க வீரராக வாய்ப்பு பெற்றுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே பார்க்கிறோம். பிட்ச் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அது நாங்கள் பயிற்சி எடுத்ததை விட நன்றாக இருப்பதால் முதலில் பேட்டிங் செய்து ரன்கள் குவிக்க விரும்புகிறோம்”

- Advertisement -

பிளேயிங் லெவன்:

“எங்கள் அணியில் இருக்கும் வீரர்கள் எனது வேலையை எளிதாக்குகிறார்கள். அவர்கள் ஐபிஎல் தொடரில் தங்களுடைய அணிகளுக்காக பயமின்றி விளையாடும் அணுகு முறையை பின்பற்றியவர்கள். அதே அணுகு முறையை இங்கே கொண்டு வர வேண்டும்” என்று கூறினார். இந்தப் போட்டியை இந்தியாவில் உள்ள ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா சேனல்களில் பார்க்கலாம்.

இதையும் படிங்க: நானா இருந்தா இதை செஞ்சுருப்பேன்.. ஆஸி அம்பயரின் அநியாய தீர்ப்பு.. இந்தியாவுக்கு ஆதரவாக ப்ராட் பதிவு

முதல் தென் ஆப்பிரிக்கா டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன்: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (கீப்பர்), சூரியகுமார் யாதவ், (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், ரவி பிஸ்னோய், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்

- Advertisement -