ஆப்கானிஸ்தான் போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா.. பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம் செய்து பேட்டி

Rohit Sharma 9
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றில் அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்தது. அதனால் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. அப்போட்டி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அத்துடன் இந்திய அணியில் முகமது சிராஜ்க்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவதாகவும் ரோஹித் சர்மா அறிவித்தார். குறிப்பாக அமெரிக்காவைப் போல் அல்லாமல் இப்போட்டி நடைபெறும் பார்படாஸ் மைதானம் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சாதகமாக இருக்கும்.

- Advertisement -

இந்திய அணி:
குறிப்பாக பந்து வீச்சில் ஸ்பின்னர்கள் இங்கே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அத்துடன் லீக் சுற்றில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தார். எனவே அவரை மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக வைத்து சிராஜை கழற்றி விட்டுள்ள இந்திய அணி தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வந்துள்ளது.

இது பற்றி டாஸ் வென்றதும் ரோகித் சர்மா பேசியது பின்வருமாறு. “நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம். பிட்ச் தற்சமயத்தில் நன்றாக தெரிகிறது. அதில் புற்கள் இல்லை. எனவே அது நேரம் செல்ல செல்ல ஸ்லோவாக மாறும் என்று கணிக்கிறேன். கண்டிப்பாக இது நியூயார்க் மைதானத்தை விட நன்றாக இருக்கிறது. நாங்கள் இந்த சூழ்நிலைக்கு விரைவாக உட்படுத்திக் கொள்ள வேண்டும்”

- Advertisement -

“இந்த மைதானத்தில் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ள நாங்கள் இங்கே சில நாட்களாக இருக்கிறோம். இது போன்ற சூழ்நிலைகளை புரிந்து கொள்வது முக்கியமாகும். போட்டி இங்கே நேரமாகவே துவங்குகிறது. பொதுவாக இங்கே மாலையில் தான் போட்டிகள் நடைபெறும். எங்கள் அணியில் ஒரு மாற்றம் செய்துள்ளோம். சிராஜுக்கு பதிலாக குல்தீப் அணிக்குள் வந்துள்ளார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: சென்னையில் 2 போட்டி.. நியூஸிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் மெகா அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ

இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (கீப்பர்), சூரியகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா

Advertisement