சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா 2024/25 சீசனில் தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. தற்போது ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வேவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டி20 தொடரில் விளையாடுகிறது. அதை முடித்துக் கொண்டு இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது.
அதன் பின் இந்திய கிரிக்கெட் அணி விளையாடப்போகும் தொடர்களின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன் படி வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளன. முதலாவதாக வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
மெகா அட்டவணை:
அந்த சுற்றுப்பயணத்தில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த தொடரும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் அங்கமாக நடைபெறுகிறது.
அதை தொடர்ந்து 2025 புத்தாண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்தியா விளையாடுகிறது. அதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் வகையில் நடைபெற உள்ளது. இந்த 3 சுற்றுப்பயணத்தில் சென்னையில் 2 போட்டிகள் நடைபெற உள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள அந்த அடுத்தடுத்த தொடர்களின் அட்டவணை பின்வருமாறு.
இந்தியா – வங்கதேச தொடர்:
முதல் டெஸ்ட்: செப்டம்பர் 19 – 23, சென்னை
2வது டெஸ்ட்: செப்டம்பர் 27 – அக்டோபர் 1, கான்பூர்
முதல் டி20: அக்டோபர் 6, தரம்சாலா
2வது டி20: அக்டோபர் 9, டெல்லி
3வது டி20: அக்டோபர் 12, ஹைதெராபாத்
இந்தியா – நியூஸிலாந்து தொடர்:
முதல் டெஸ்ட்: அக்டோபர் 16 – 20, பெங்களூரு
2வது டெஸ்ட்: அக்டோபர் 24 – 28, புனே
3வது டெஸ்ட்: நவம்பர் 1 – 5, மும்பை
இதையும் படிங்க: பும்ரா மட்டுமல்ல.. எல்லா இந்திய பவுலரையும் அடிப்பேன்.. எங்களோட டார்கெட்டே வேற.. குர்பாஸ் பேட்டி
இந்தியா – இங்கிலாந்து தொடர் (2025):
முதல் டி20: ஜனவரி 22, சென்னை
2வது டி20: ஜனவரி 25, கொல்கத்தா
3வது டி20: ஜனவரி 28, ராஜ்கோட்
4வது டி20: ஜனவரி 31, புனே
5வது டி20: பிப்ரவரி 2, மும்பை
முதல் ஒன்டே: பிப்ரவரி 6, நாக்பூர்
2வது ஒன்டே: பிப்ரவரி 9, கட்டாக்
3வது ஒன்டே: பிப்ரவரி 12, அஹ்மதாபாத்



