இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட பந்து எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போனது என்று தெரியுமா ?

Pak-fans
- Advertisement -

நடப்பு உலக கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் போன்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

Kohli

- Advertisement -

இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது. அடுத்து நேற்று நடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியதால் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எனவே ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் உலக கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தான் முழுவதும் பயன்படுத்தப்பட்ட பந்து மற்றும் டாஸ் போடப்பட்ட காயின் ஆகியவை இணையதளத்தின் மூலம் ஏலம் விடப்பட்டது. அதன் மூலம் கிடைத்த தொகை குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

ind pak

அதன்படி இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்து இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கும், டாஸ் போடப்பட்ட காயின் சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

Advertisement