- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs ENG : 5வது டெஸ்டில் இந்தியா நிச்சயமாக வெல்லும், ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கும் புள்ளிவிவரம் இதோ

இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காம் நகரில் ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்கிய 5-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் போராடி 416 ரன்கள் குவித்தது. புஜாரா, சுப்மன் கில், விகாரி விராட் கோலி என முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 98/5 என மோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு அதிகபட்சமாக 6-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பண்ட் டி20 இன்னிங்ஸ் போல 146 (111) ரன்கள் விளாசினார்.

அவருடன் நங்கூரமாக பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா சதமடித்து 104 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதைவிட கடைசி நேரத்தில் களமிறங்கிய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா ஸ்டூவர்ட் ப்ரோட் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்களை பறக்கவிட்டு உலக சாதனை படைத்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அலெஸ் லீஸ் 6, ஜாக் கிராவ்லி 9, ஓலி போப் 10, ஜோ ரூட் 31, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 25 என அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகளும் பும்ரா 3 விக்கெட்டும் எடுத்தனர்.

வெல்லுமா இந்தியா:
அதை தொடர்ந்து 132 ரன்களை முன்னிலை பெற்ற இந்தியா தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய போது சுப்மன் கில் 4, விஹாரி 11, விராட் கோலி 20 என மீண்டும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் சிறப்பான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். அதனால் 75/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு இம்முறை தொடக்க வீரராக களமிறங்கி நங்கூரமாக நிற்கும் அனுபவ வீரர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் 50* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மீட்டெடுக்கும் முயற்சியில் விளையாடி வருகிறார். அதில் புஜாரா 50* ரன்களுடனும், பண்ட் 30* ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

- Advertisement -

தற்போதைய நிலைமையில் இங்கிலாந்தை விட 257 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்தியா இப்போட்டியில் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. இன்றைய 4-வது நாளில் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து 400க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்தால் இந்தியாவின் வெற்றி பிரகாசமாகி விடும். கடந்த வருடம் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டியே தற்போது நடைபெற்று வருகிறது.

2007க்கு பின்:
கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையில் தடுமாறிய இங்கிலாந்து இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அதிரடி வெற்றிகளை குவிக்கும் வெற்றிகரமான அணியாக வலுவாக மாறியுள்ளது. அதற்கேற்றார் போல் கடந்த வாரம் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை தனது சொந்த மண்ணில் சாய்த்த அந்த அணி 3 – 0 (3) என்ற கணக்கில் தொடரை வென்ற பின் அதேபோல் விளையாடி உங்களையும் சாய்ப்போம் என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தது.

- Advertisement -

இருப்பினும் அதை சமாளிப்பதற்கு இந்திய தரப்பில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா கடைசி நேரத்தில் விலகியதால் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இப்போட்டியில் இந்தியா வெல்லுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இதுவரை நடைபெற்ற 3 நாட்களின் முடிவில் அபாரமாக விளையாடி வரும் இந்தியா 2007க்கு பின் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க போராடி வருகிறது.

நம்பிக்கை புள்ளிவிவரம்:
இந்நிலையில் இத்தொடரை இந்தியா வெல்லும் என்று சொல்லும் வரலாற்றுக் புள்ளிவிவரத்தை பற்றி பார்ப்போம்.
1. கடந்த 2014 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் புத்துயிர் பெற்று ஏராளமான வெற்றிகளை பெற்று வரும் இந்தியா கடந்த 2015க்கு பின் முதல் இன்னிங்சில் 400 ரன்கள் குவித்த எந்த ஒரு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்றதே கிடையாது.

- Advertisement -

ஆம் அதுபோன்ற 18 போட்டிகளில் 15 வெற்றிகளை குவித்த இந்தியா 3 போட்டிகளை டிரா செய்தது. அந்த வகையில் இப்போட்டியில் 416 ரன்களை குவித்துள்ள இந்தியா இப்போட்டியில் வெல்லும் என அடித்துக் கூறலாம். ஒருவேளை டிராவில் முடிந்தால் கூட இந்தியா தொடரை வென்று விடும்.

இதையும் படிங்க : கொரோனாவில் இருந்து மீண்ட ரோஹித் சர்மா. மீண்டும் எப்போது அணிக்கு திரும்புகிறார் தெரியுமா? – வெளியான நற்செய்தி

2. அதேபோல் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதலில் இந்தியா பேட்டிங் செய்து 100க்கும் மேற்பட்ட ரன்கள் முன்னிலை பெற்ற எந்த போட்டியிலும் தோற்றதே கிடையாது. அந்த வகையில் இப்போட்டியில் 2-வது இன்னிங்ஸில் 132 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்தியா இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையிலும் வெல்லும் என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -
Published by