சச்சினை முந்தி விராட் கோலி 200 சதங்களை அடிச்சாலும் ஒரு பயனும் இல்ல – ரசித் லதீப் பேசும் நிதர்சமான உண்மை என்ன

Virat Kohli Rashid Latif
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் களமிறங்கியுள்ளது. அதில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் நடந்த ஒருநாள் தொடரில் தோற்ற இந்தியா கத்துக்குட்டி வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் தொடரிலும் 2 – 1 (3) என்ற கணக்கில் அவமான தோல்வியையே சந்தித்தது. இருப்பினும் கடைசி போட்டியில் இஷான் கிசான் இரட்டை சதமடித்து 210 (131) ரன்களும் விராட் கோலி சதமடித்து 113 (91) ரன்களும் குவித்த அதிரடியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பிரம்மாண்ட வெற்றி பெற்றது ரசிகர்களை ஓரளவு ஆறுதலடைய வைத்தது.

Virat Kohli

- Advertisement -

முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரையும் மிஞ்சி அதிவேகமாக 10,000 ரன்களை குவித்த பேட்ஸ்மேன் போன்ற உலக சாதனைகளை படைத்துள்ள விராட் கோலி கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு தன்னுடைய 43வது சதத்தை அடித்திருந்த நிலையில் 1214 நாட்கள் கழித்து ஒரு வழியாக 44வது சதத்தை விளாசினார். 2019க்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் சதமடிக்கவில்லை என்பதற்காக சந்தித்த கடுமையான விமர்சனங்களை சமீபத்திய ஆசிய கோப்பையில் அடித்து நொறுக்கிய அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்து 295 ரன்கள் விளாசி அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக அபார சாதனை படைத்தார்.

என்ன பயன்:

இருப்பினும் இதர வீரர்களின் சொதப்பலால் கோப்பையை இந்தியா முத்தமிடத் தவறிய நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் ஃபார்முக்கு திரும்பியுள்ளது 2023 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு பெரிய வலுவை சேர்த்துள்ளது. அத்துடன் 72 சதங்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் எடுத்த 2வது பேட்ஸ்மேன் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்த அவர் முதலிடத்தில் இருக்கும் சச்சின் 100 சதங்கள் சாதனையை உடைப்பாரா என்ற எதிர்பார்ப்பு மீண்டும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சச்சினின் 100 சதங்கள் சாதனையை தகர்த்து விராட் கோலி 200 சதங்களை அடித்தாலும் இந்தியா உலக கோப்பையை வெல்லாவிட்டால் அதில் என்ன பயன் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப் விமர்சித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இது எத்தனை சதங்கள் என எண்ணுவதற்கான நேரமில்லை. அதில் எந்த பயனும் இல்லை. மாறாக அவர்கள் (இந்தியா) தற்போது உலக கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏனெனில் அவர்கள் உலகக் கோப்பையை கடைசியாக வென்று பல வருடங்கள் ஆகிவிட்டது”

- Advertisement -

“எனவே விராட் கோலி 100 சதங்கள் அல்லது 200 சதங்கள் அடிக்கிறார் என்பது விஷயமல்ல. தற்போது இந்திய கிரிக்கெட் மற்றும் ரசிகர்களை பொறுத்த வரை உலக கோப்பையை வெல்வதே முக்கியம். ஏனெனில் பொருளாதார அளவில் நீங்கள் பார்க்கும் போது ஐபிஎல் காரணமாக இந்திய கிரிக்கெட் பன்மடங்கு உயர்ந்து விட்டது. ஆனால் இந்திய ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற பசியுடன் காத்திருப்பதால் இந்திய அணிக்கு பெரிய அழுத்தம் இருந்து வருகிறது. விராட் கோலி விரும்பினால் 100 சதங்களை அடிப்பார். ஆனால் இந்தியாவின் கோரிக்கை மாறிவிட்டது”

Latif

“ஏனெனில் ஆசிய கோப்பையில் அவர்கள் தோற்றார்கள். சாம்பியன்ஸ் ட்ராபியும் சென்று விட்டது. 2019 உலக கோப்பை போலவே கடந்த 2 உலக கோப்பையிலும் அவர்களுக்கு தோல்வி தான் மிஞ்சியது. எனவே 100 சதங்கள் என்பது விராட் கோலியின் சொந்த பெயரில் மட்டும் தான் இருக்கும். ஆனால் இந்திய கிரிக்கெட் மற்றும் இந்திய வாரியத்திற்கு உலகக் கோப்பை தேவைப்படுகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: வீடியோ : இந்த வெற்றிக்கு காரணமே நீங்க தான் ஆனால் – சூப்பர் ஓவரில் வென்ற பின் ரசிகர்களுக்கு மந்தனா வைத்த மனமுருகும் கோரிக்கை

அதாவது விராட் கோலி 100 சதங்களை அடிப்பதை விட உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே தற்சமயத்தில் இந்திய ரசிகர்களின் மிகப்பெரிய ஆசையாக இருப்பதாக ரசித் லதீப் கூறியுள்ளார். இருப்பினும் அதற்காக விராட் கோலி முடிந்த அளவுக்கு போராடினாலும் இதர வீரர்கள் சொதப்புவதால் அவரால் என்ன செய்ய முடியும் என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

Advertisement