இந்திய அணி ஆஸியில் ஜெய்க்க அவர் தேவை.. காரணம் இது தான்.. சீக்கிரம் டீம்ல சேருங்க.. உத்தப்பா கருத்து

Robin Uthappa 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

ஆனால் நியூசிலாந்திடம் சொந்த மண்ணிலேயே தோற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாலில் மீண்டும் வெல்லுமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. அத்துடன் ஆஸ்திரேலிய தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஷமி தேர்வு செய்யப்படாததும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியா வெல்வதற்கு புஜாரா தேவை என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

- Advertisement -

உத்தப்பா கோரிக்கை:

2018 – 19 ஆஸ்திரேலிய தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த புஜாரா இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதே போல 2020 – 21 தொடரிலும் அதிக பந்துகளை எதிர்கொண்ட அவர் 250க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதன் பின் சுமாராக விளையாடியதால் கழற்றி விடப்பட்ட அவர் சமீபத்திய ரஞ்சிக்கோப்பை போட்டியில் இரட்டை சதமடித்து ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

எனவே ஆஸ்திரேலியாவில் நங்கூரமாக விளையாடுவதற்கு புஜாரா போன்றவர் தேவை என்று உத்தப்பா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “செடேஸ்வர் புஜாரா போன்ற வீரர்களுக்கு இப்போதும் இந்திய அணியில் இடம் இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை முடிந்தளவுக்கு சீக்கிரம் அவருக்கான இடத்தை இந்திய அணியில் உருவாக்க வேண்டும். அது தற்போது தேவைப்படுகிறது”

- Advertisement -

புஜாரா வேண்டும்:

“ஏனெனில் நம்முடைய தற்போதைய பேட்டிங் வரிசையில் ஒன்று முதல் 6 வரை உள்ளவர்கள் பெரும்பாலும் ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர்கள். எனவே சரிவு ஏற்படும் போது நங்கூரமாக விளையாட நமக்கு ராகுல் ட்ராவிட், புஜாரா, கேன் வில்லியம்சன், வில் எங் போன்றவர்கள் தேவை. மற்ற பேட்ஸ்மேன்கள் அவர்களைச் சுற்றி விளையாடலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: பாபர் அசாம் ஃபார்முக்கு திரும்ப விராட் கோலியின் ரூட்டை ஃபாலோ செய்வதே வழி.. பாண்டிங் அறிவுரை

அவர் கூறுவது போல தற்போதைய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா சுயநலமின்றி அதிரடியாக விளையாட வேண்டும் என்ற கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். அதைப் பின்பற்றி அனைத்து வீரர்களுமே அதிரடியாக விளையாடுகிறார்கள். அது அனைத்து நேரங்களிலும் வேலையாகாது என்றும் சொல்லலாம். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான பொறுமையும் நிதானமும் கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஸ்டைலைக் கொண்ட புஜாரா போன்றவர் இந்திய அணிக்கு தேவை என்றே சொல்லலாம்.

Advertisement