IND vs BAN : 3 ஆவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றம் – பிளேயிங் லெவன் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது வங்கதேச நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியானது தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று சட்டகிராம் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

IND vs BAN Rohit Sharma Liton Das

- Advertisement -

அதன்படி சற்று முன்னர் நடைபெற்ற டாசுக்கு பிறகு டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணி பேட்டிங் செய்ய இருக்கிறது. இந்த 3 ஆவது ஒருநாள் போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெறுமா என்பதே அனைவரது எதிர்பார்ப்பதாகவும் உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் கடந்த இரண்டாவது போட்டியின் போது காயமடைந்த ரோகித் சர்மா மற்றும் தீபத் சாஹர் ஆகியோர் வெளியேறியதால் அவர்களுக்கு பதிலாக விளையாடப்போவது யார்? என்ற கேள்வி அதிகளவில் இருந்தது. இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்றைய டாஸ்க்கு பிறகு பேசிய கேப்டன் ராகுல் கூறுகையில் :

Ishan Kishan 1

ரோகித் சர்மாவிற்கு பதிலாக இஷான் கிஷனும், அதே போன்று தீபக் சாகருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். இதனை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் பிளேயிங் லெவனில் செய்யப்படவில்லை. அதேபோன்று ஏற்கனவே இந்த தொடரை இந்திய அணி இழந்துள்ளதால் இன்றைய மூன்றாவது போட்டியிலாவது கவுரவமான ஒரு முடிவுடன் விடைபெறவே இந்திய அணி ஆர்வம் காட்டும்.

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் தற்போது பங்களாதேஷ் அணியும் களமிறங்கியுள்ளார். இதனால் இந்த போட்டி ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. அதன்படி இன்றைய மூன்றாவது கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 : 1.5 கோடி அடிப்படை தொகைக்கு கூட ஏலம் போகமாட்டார்கள் என்று சொல்லக்கூடிய 3 நட்சத்திர வீரர்கள்

1) ஷிகார் தவான், 2) இஷான் கிஷன், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) அக்சர் படேல், 7) வாஷிங்க்டன் சுந்தர், 8) ஷர்துல் தாகூர், 9) முகமது சிராஜ், 10) உம்ரான் மாலிக், 11) குல்தீப் யாதவ்.

Advertisement