IND vs PAK : 7 வருடங்கள் கழித்து தோற்ற இந்தியா – முடிவுக்கு வந்த அதிர்ஷ்ட தேவதையின் வெற்றிநடை, ரசிகர்கள் வேதனை

IND vs PAK Deepak Hooda INdia
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பை தொடரில் செப்டம்பர் 4ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 2வது சூப்பர் 4 சுற்று போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. அதனால் வழக்கம் போல உலக அளவில் இப்போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறிய நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 181/7 ரன்கள் சேர்த்தது. 54 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் தலா 28 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

Virat Kohli IND vs PAK

- Advertisement -

அந்த நிலைமையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய ரிஷப் பண்ட் 14 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா டக் அவுட்டாகி அதைவிட மாபெரும் அதிர்ச்சி கொடுத்தார். அதனால் பெரிய பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு இளம் வீரர் தீபக் ஹூடாவும் 16 ரன்களில் அவுட்டாகி கைவிட்டாலும் மறுபுறம் 3-வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக நின்ற நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தனது விமர்சனங்களை அடித்து நொறுக்கும் வகையில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் கடந்து 60 (44) ரன்கள் எடுத்து போராடி கடைசி ஓவரில் அவுட்டானார். பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சடாப் கான் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

பாகிஸ்தான் வெற்றி:
அதை தொடர்ந்து 182 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் ஆரம்பத்திலேயே 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த பகார் ஜமான் 15 ரன்களில் நடையை கட்டினார். அதனால் 63/2 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கி தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்து 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய முகமத் நவாஸ் 6 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 42 (20) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த ஓவரிலேயே 6 பவுண்டரி 2 சிக்சருடன் 71 (51) ரன்கள் குவித்து முகமது ரிஸ்வானை அவுட் செய்த இந்தியா வெற்றிக்கு போராடியது.

IND vs PAk Rahul Hardik Pandya

இருப்பினும் குஷ்தில் ஷா 14* (11) ஆசிப் அலி 16 (8) என கடைசியில் வந்த வீரர்கள் தேவையான ரன்களை அடித்ததால் 19.5 ஓவரில் 182/5 ரன்களை எடுத்த பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று லீக் சுற்றில் தோல்வியை பரிசளித்த இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து பழி தீர்த்துள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் 200 ரன்களை எடுக்க தவறி பந்து வீச்சிலும் கடைசி நேரத்தில் சொதப்பிய இந்தியா அடுத்ததாக ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான எஞ்சிய சூப்பர் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

7 வருடங்கள்:
இப்போட்டியில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யாதது, 19வது ஓவரில் புவனேஸ்வர் குமார் 19 ரன்களை வாரி வழங்கியது போன்ற தவறான முடிவுகளும் மற்றும் முக்கிய நேர சொதப்பல்களும் இந்தியா தோல்வியடைய காரணமாக அமைந்தது. அதனால் ஆசிய கோப்பையில் 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக தோற்றுள்ளது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கடைசியாக கடந்த 2014இல் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இதேபோல் கடைசி ஓவரில் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வினை அடுத்தடுத்த சிக்ஸர்கள் பறக்கவிட்ட சாகித் அப்ரிடி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைய வைத்தார்.

Deepak-Hooda

அதன்பின் 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் தோல்வியடையாமல் கோப்பைகளையும் வென்ற இந்திய அதே காலகட்டத்தில் பாகிஸ்தானை 4 போட்டிகளில் தோற்கடித்திருந்தது. ஆனால் தற்போது அந்த வெற்றிநடை முடிவுக்கு வந்துள்ளது. அதே போல் இந்தியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை (182) வெற்றிகரமாக சேசிங் செய்து பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: IND vs PAK : 7 வருடங்கள் கழித்து தோற்ற இந்தியா – முடிவுக்கு வந்த அதிர்ஷ்ட தேவதையின் வெற்றிநடை, ரசிகர்கள் வேதனை

அதிர்ஷ்ட தேவதை:
அத்துடன் ஆசிய கோப்பையில் முதல் முறையாக ரோகித் சர்மா தலைமையில் இந்தியா நேற்று தோல்வியடைந்தது. மேலும் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக அவரது தலைமையில் 180+ ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்தியா தோற்றுள்ளது. அதை விட இந்தியாவின் அதிர்ஷ்ட தேவதை என்றழைக்கப்படும் தீபக் ஹூடா இடம் பிடித்திருந்த 16 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று வந்த இந்தியா நேற்றைய போட்டியில் முதல் முறையாக தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement