இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்தது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் சார்பாக விகாரி சதம் அடித்து அசத்தினார்.
அதன்பின்னர் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் 117 ரன்களில் சுருண்டது. பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 168 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணிக்கு 468 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை கடக்க முடியாமல் 210 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஆன இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றிய கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒரு முக்கியமான வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அதாவது கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி ஆஷஸ் தொடருடன் தொடங்கிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன் முதலில் தொடரை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. ஏனெனில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது. மேலும் ஆஷஸ் தொடர் இன்னும் முடிவடையாமல் இருப்பதால் தற்போது இந்திய அணி டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி முதன்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன் முதலில் தொடரை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்தது.