இந்தியா பலம் வாய்ந்த அணி..! மனம் திறந்த சாம் பில்லிங்ஸ்..! – காரணம் இதுதான்..?

sam
Advertisement

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை கைப்பற்றிய தெம்பில் இன்று(ஜூலை 12) நடைபெற உள்ள முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவிருக்கிறது இந்திய அணி.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து அணி முதல் இடத்தில உள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெரும் பட்சத்தில் ஒரு நாள்; தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தை பெரும். இதனால் இந்த தொடரின் முதல் போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக கோப்பையில் இந்திய அணி மிகவும் சவாலாக இருக்கும் என்று இங்கிலாந்து அணியின் சாம் பில்லிங்ஸ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இதுகுறித்து பேசிய அவர் “அடுத்த ஆண்டு எங்கள் மண்ணில் நடைபெற உள்ள உலக கோப்பையில் பலம் பொருந்திய பல அணிகள் பங்கேற்கவுள்ளது.

அதிலும் குறிப்பாக இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. இந்திய அணியில் பல இளம் வீரர்கள் இருக்கின்றனர். இதனால் இந்திய அணி மிகவும் சவாலான ஒரு அணியாக இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பையை நினைவில் கொண்டே நாங்கள் இந்த தொடரில் விளையாடி வருகிறோம். மூன்று ஒரு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் எங்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும் ” என்று தெரிவித்துள்ளார.

Advertisement