அரையிறுதியில் விளையாடாமல் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது – ஐ.சி.சி யின் அசரவைக்கும் விதி

Jadhav
- Advertisement -

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் நாளை அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது.

jadeja

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி நியூசிலாந்து அணி அரையிறுதிப் போட்டியில் விளையாடாமலே அரையிறுதிக்கு முன்னேறும் என்ற வாய்ப்பு உள்ளதாக ஒரு செய்தி குறித்து ஐசிசியின் விதிப்படி தற்போது வைரலாகி வருகிறது. அது யாதெனில் நாளை அரையிறுதிப் போட்டி நடைபெற உள்ள மான்செஸ்டர் நகரில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் நாளைய போட்டியில் தடை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

அதன்படி அரையிறுதிப் போட்டி ஒன்று மழையால் தடைபட்டால் மீண்டும் அடுத்த நாள் நடக்கும் என்பதை விதி கூறுகிறது. அவ்வாறு அடுத்த நாளான 10ஆம் தேதி போட்டி துவங்கும் அன்றைய நாளிலும் மழை குறுக்கிட்டதால் போட்டி அதோடு கைவிடப்பட்டு புள்ளிப் பட்டியலில் லீக் போட்டிகளில் யார் முதலிடத்தில் உள்ளார்களோ அவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள்.

pandya

அதன் காரணமாக 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் விடாமலேயே இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக ஐசிசியின் விதிமுறை கூறுகிறது. இந்தச் செய்தி மூலம் இந்திய ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மான்செஸ்டர் நகரில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை அறிக்கை வெளியாகி உள்ளதால் இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல ஒரு வாய்ப்பு உள்ளது.

Advertisement