80.60% இதுக்கு இந்தியா எவ்வளவோ பரவால்ல.. நியூஸிலாந்தை விட ஃபீல்டிங்கில் மாஸ் காட்டும் விவரம்

Catch Efficiency
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையில் இந்தியா களமிறங்கியுள்ளது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

ஏனெனில் அப்போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா 5 சதங்கள் சாதனை படைத்தது. இருப்பினும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக ஃபினிஷிங் செய்யத் தவறியது தோல்விக்கு காரணமானது. அதை விட ஃபீல்டிங் துறையில் இந்தியா 7 கேட்ச்களை கோட்டை விட்டது இங்கிலாந்து எளிதாக வெற்றி பெற உதவியது.

- Advertisement -

இந்தியா பரவால்ல போலயே:

குறிப்பாக ஜெய்ஸ்வால் மட்டும் 4 கேட்ச்களை விட்டது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. அதன் காரணமாக சமூக வலைதளங்களில் ஜெய்ஸ்வால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதே போல ஜடேஜா (2), ரிசப் பண்ட் (1) ஆகியோரும் கேட்ச்களை விட்டதால் இந்திய அணி ஃபீல்டிங் துறையில் முன்னேற வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி பார்படாஸ் நகரில் நேற்று முடிந்தது. அப்போட்டியில் சமர் ஜோசப் பந்து வீச்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கொடுத்த சில கேட்ச்களை வெஸ்ட் இண்டீஸ் ஃபீல்டர்கள் கோட்டை விட்டார்கள். அப்போது 2023 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்லிப் மற்றும் ஃகல்லி பகுதிகளில் அதிக கேட்ச்களை பிடித்த அணிகளின் பட்டியல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

- Advertisement -

இந்தியா சீக்கிரம் அசத்தும்:

அதன் படி வெஸ்ட் இண்டீஸ் அணி 65.60% கேட்ச்களை மட்டுமே பிடித்து உலகிலேயே மிகவும் மோசமாக செயல்படுவது தெரிய வந்தது. அந்தப் பட்டியலில் ஆச்சரியப்படும் வகையில் இந்தியா 80.60% கேட்ச்களை பிடித்து அசத்தலாக செயல்பட்டு முதலிடம் பிடித்துள்ளது. ஃபீல்டிங் துறையில் அற்புதமாக செயல்படுவதற்கு பெயர் போன நியூஸிலாந்து அணி கூட 78.50% கேட்ச்களை பிடித்து 2வது இடத்தில் தான் இருக்கிறது.

இதையும் படிங்க: 11க்கு 8 தோல்வி.. சாக்கு தேவையில்ல.. எல்லாம் கிடைச்சும் இதை செய்யலன்னா கம்பீர் எதுக்கு? ஆகாஷ் சோப்ரா

இலங்கை, டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் முறையே 78.3%, 75%, 74.50%, 72.30%, 68%, 67.2% கேட்ச்களை பிடித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதைப் பார்க்கையில் இந்தியா எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லத் தோன்றுகிறது. உண்மையில் யாரும் வேண்டுமென்றே கேட்ச்களை விட மாட்டார்கள். குறிப்பாக ஜெய்ஸ்வால் தமது வாழ்நாளில் முதல் முறையாக இங்கிலாந்தில் விளையாடுவதால் அனுபவமின்றி கேட்ச்களை விட்டார். எனவே அந்த பாடத்திலிருந்து முன்னேறி இங்கிலாந்து தொடர் முடிவதற்குள் அனைவரும் பாராட்டும் அளவுக்கு அவர் கேட்ச்சுகளை பிடிப்பார் என்று நம்பலாம்.

Advertisement