11க்கு 8 தோல்வி.. சாக்கு தேவையில்ல.. எல்லாம் கிடைச்சும் இதை செய்யலன்னா கம்பீர் எதுக்கு? ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்த பின் கத்துக்குட்டி வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா எளிதாக வென்றது.

ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற தொடரில் இந்தியா சொந்த மண்ணில் வரலாற்றிலேயே முதல் முறையாக 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. தற்போது இங்கிலாந்திலும் முதல் போட்டியிலேயே இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.

- Advertisement -

எல்லாம் கிடைச்சும்:

அந்த வகையில் கௌதம் கம்பீர் வழி காட்டுதலில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் இந்தியா 7 தோல்வி வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து தொடரிலும் தோல்வியை சந்தித்தால் பிசிசிஐ கௌதம் கம்பீரை டெஸ்ட் கிரிக்கெட்டின் பயிற்சியாளராக தொடர விடக்கூடாது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இந்திய கிரிக்கெட்டில் ஒரு தத்துவம் இருக்கிறது. அதாவது வெற்றி பெற்றால் இங்கே அனைவரும் பெருமையடைவார்கள். தோல்வியை சந்தித்தால் கண்டிப்பாக விமர்சனங்கள் வரும். சுப்மன் கில் இப்போது தான் கேப்டனாக வந்துள்ளதால் பொறுமை காக்க வேண்டும். ஆனால் கௌதம் கம்பீர் மீது நிறைய அழுத்தம் உருவாகி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய வழிகாட்டுதலில் நாம் அதிக வெற்றிகளைப் பெறவில்லை”

- Advertisement -

சாக்கு சொல்லாதீங்க:

“வங்கதேசத்துக்கு எதிராக 2 வெற்றிகளைப் பெற்ற அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1 வெற்றி பெற்றார். ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக 3, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3, தற்போது இங்கிலாந்தில் 1 தோல்வியை சந்தித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியை மட்டுமே சந்திக்கும் அவர் வெள்ளைப்பந்து போட்டிகளில் அசத்துகிறார். கடவுளின் அருளால் இத்தொடரை இந்தியா வெல்ல வேண்டும் என்று நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க: 78 ரன்ஸ்.. வங்கதேசத்தின் வீராப்பை அடக்கிய இலங்கை.. 9வது அபார வெற்றியால் இந்தியாவை முந்தி அசத்தல்

“ஆனால் ஒருவேளை இங்கிலாந்து தொடர் நன்றாக செல்லவில்லை என்றால் கௌதம் கம்பீர் மீது பெரிய கேள்வி வரும். ஏனெனில் நிர்வாகத்தில் இருக்கும் உங்களுக்கு நீங்கள் விரும்பும் வீரர்களையும் அணியையும் தேர்வுக் குழுவினர் கொடுத்துள்ளார்கள். எனவே நீங்கள் அவர்களை வைத்து தேவையான வெற்றி முடிவுகளை கொடுக்க வேண்டும். விரும்பிய அனைத்து வீரர்களையும் வசதிகளையும் பெற்ற பின் சாக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்று கூறினார்.

Advertisement