IND vs BAN : முக்கிய வீரர்கள் பொறுப்பற்ற ஆட்டம், ஆரம்பத்திலேயே திணறும் இந்தியா – உணவு இடைவெளி ஸ்கோர் இதோ

Virat Kohli Ban
- Advertisement -

2023ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் வங்கதேசத்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இந்தியா ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்து கடைசியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2 – 1 என்ற கணக்கில் வைட் வாஷ் தோல்வியை தவிர்த்தது. அதனால் ரசிகர்கள் ஓரளவு ஆறுதலடைந்த நிலையில் அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14ஆம் தேதியன்று துவங்கியது.

குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரில் தற்போது புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ள இந்தியா வரும் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஃபைனலுக்கு தகுதி பெற இத்தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் மிகவும் முக்கியமாக பார்க்கப்படும் இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறியது பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் முதல் போட்டியில் ராகுல் இந்தியாவை வழி நடத்துகிறார்.

- Advertisement -

அந்த நிலைமையில் சட்டகிரோம் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் சேர்க்கப்பட்ட நிலையில் அக்சர் படேல், அஷ்வின், குல்தீப் யாதவ் ஆகிய மும்முனை சுழல் பந்து வீச்சு கூட்டணி சேர்க்கப்பட்டது. மேலும் ராகுல், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய பேட்ஸ்மேன்கள் சேர்க்கப்பட்டனர்.

ஆரம்பத்திலேயே திணறல்:
அதை தொடர்ந்து துவங்கிய போட்டியில் நிதானமாக செயல்பட்ட தொடக்க வீரர் சுப்மன் கில் 3 பவுண்டரியுடன் 20 (4) ரன்கள் எடுத்திருந்த போது லெக் சைடு திசையில் தவறான ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சித்து தனது விக்கெட்டை பரிசளித்தார். மறுபுறம் வழக்கம் போல தடவிய மற்றொரு தொடக்க வீரர் கேஎல் ராகுல் கேப்டன் என்ற பொறுப்புடன் விளையாடாமல் 3 பவுண்டரியுடன் 22 (54) ரன்கள் எடுத்திருந்த போது டைஜூல் இஸ்லாமிடம் எட்ஜ் வாங்கி தன்னைத்தானே போல்ட்டாக்கி சென்றார்.

- Advertisement -

போதாக்குறைக்கு அடுத்த ஓவரிலேயே நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வெறும் 5 பந்துகளை எதிர்கொண்டு எல்பிடபிள்யு முறையில் அவரிடமே அவுட்டாகி சென்றார். அதனால் 48/3 என்ற தடுமாற்றமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு புஜாரா வழக்கம் போல 12* (32) ரன்கள் எடுத்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய ரிஷப் பண்ட் வழக்கம் போல தனக்கே உரித்தான அதிரடி பாணியில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 29* (26) ரன்கள் எடுத்ததால் முதல் நாள் உணவு இடைவெளியின் போது இந்தியா 85/3 ரன்களுடன் விளையாடி வருகிறது.

இப்போட்டியில் ஆரம்பத்திலேயே விக்கெட்கள் கிடைக்க ஆரம்பித்து விட்டதால் நேரம் செல்ல செல்ல மைதானம் பேட்டிங்க்கு இன்னும் சவாலாக இருக்கும். அதனால் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இந்தியா முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டு 300 – 500 போன்ற பெரிய ரன்களை குவிக்க வேண்டியது அவசியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு நல்ல அடித்தளம் தேவைப்படும் நிலையில் அதை செய்ய தவறிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி அதிகப்படியான நிதானம் என்ற பெயரில் இப்படி விக்கெட்டை வங்கதேசத்துக்கு பரிசளித்தது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.

இதையும் படிங்க: ஜெயதேவ் உனட்கட் போல இந்திய கிரிக்கெட்டில் நீண்ட வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த 3 வீரர்களின் பட்டியல்

இதனால் தயவு செய்து ஒருநாள் தொடரில் ஆரம்பத்திலேயே சொதப்பியது போல் டெஸ்ட் தொடரிலும் சொதப்பி விடாதீர்கள் என்று ரசிகர்கள் இந்திய அணியிடம் கோரிக்கை வைக்க்கிறார்கள். மேலும் ரிஷப் பண்ட் தன் மீதான விமர்சனங்களை உடைத்து அதிரடியாக விளையாடி இந்தியாவை காப்பாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement