இந்திய அணி இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஐயர்லாந்து சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டப்ளினில் மைதானத்தில் கடந்த புதன் கிழமை(ஜூன் 27) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த தொடர் முடிந்த்தும் இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதில் 5 டெஸ்ட் , 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் தொடரில் விலையையடவுள்ளது. தற்போது ஐயர்லாந்து அணிகளுடன் இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜூன் 29) நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் பட்டத்தை தட்டி செல்லும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த தொடரின் முதல் போட்டியில் வாய்பளிக்கபடாமல் இருந்தது. அவர்கள் அனைவருக்கும் அடுத்த போட்டியில் வாய்ப்பளிக்கபடும் என்று அணியின் கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். இதன் மூலம் இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்ட்டது. அதே போல முதல் போட்டியில் விளையாடாத கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் உட்பட சில வீரர்களுக்கு இரண்டாவது டி20 போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிரிபார்க்படுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளதால். அணைத்து வீரர்களையும் சோதனை செய்து பார்க்கும் கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. அப்படி இருக்க இந்த இரண்டாவது போட்டியில் , முதல் போட்டியில் காயமடைந்த பும்ராவிற்கு பதிலாக புதிய வீரர் சித்தார்த் கவுளுக்கு வாய்ப்பளிக்கபடலாம். அதே போன்று கே எல் ராகுலுக்கு இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.