சொன்னா நம்பமாட்டீங்க. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இதுவே முதன் முறையாம் – விவரம் இதோ

Kohli-4

இந்திய அணி நேற்று முன்தினம் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மோதியது. மொகாலியில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.

Kohli 1

இந்தியாவின் வெற்றிக்கு கேப்டன் கோலி உறுதியாக நின்று 72 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பின்னர் ஒரு சோகக் கதையும் உள்ளது. அது யாதெனில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை டி20 போட்டிகளில் இந்திய மண்ணில் வீழ்த்தியதே கிடையாது. வெளிநாட்டில் நடைபெறும் டி20 போட்டிகளில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உள்ளதே தவிர இந்திய மண்ணில் நடைபெற்ற டி20 போட்டியில் இதுவரை வீழ்த்தியதே இல்லை என்ற மோசமான சாதனையை வைத்திருந்தது.

Jadeja

அதனை தற்போது நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணியை பழிதீர்த்தது குறிப்பிடத்தக்கது. இதுவே இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய மண்ணில் பெற்ற முதல் டி20 வெற்றி என்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -