- Advertisement -
இந்திய கிரிக்கெட்

WTC Final : 108க்கு 7 விக்கெட், இந்தியாவின் மாஸ் போராட்டம் வெல்லுமா? ஓவலில் 87 வருட சாதனையை தூளாக்கிய ஸ்மித் – ஹெட் ஜோடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதி துவங்கிய 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாளிலேயே இந்திய பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 327/3 ரன்கள் எடுத்து மிரட்டியது. அந்த அணிக்கு உஸ்மான் கவாஜா டக் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் வார்னர் 43 ரன்களும் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 26 ரன்களும் எடுத்தனர்.

அதை விட 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து இந்திய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட ட்ராவிஸ் ஹெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி விரைவாக ரன்களை சேர்த்து ஃபைனலில் சதமடித்த முதல் வீரராக சாதனை படைத்தார். அவருடன் மறுபுறம் நங்கூரமாக நின்ற ஸ்டீவ் ஸ்மித் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி முதல் நாளிலேயே 95 ரன்கள் சேர்த்தார். அந்த நிலைமையில் இன்று துவங்கிய 2வது நாளில் தன்னுடைய 31வது சதத்தை அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற ஜோ ரூட் சாதனையை சமன் செய்தார்.

- Advertisement -

போராடும் இந்தியா:
மறுபுறம் தொடர்ந்து மிரட்டிய ஹெட் 150 ரன்களை கடந்து சவாலை கொடுத்ததால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்தனர். அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு 285 ரன்கள் மெகா பார்ட்னர்சிப் அமைத்த அந்த ஜோடி ஒரு வழியாக ட்ராவிஸ் ஹெட் 163 ரன்களில் சிராஜ் வேகத்தில் அவுட்டானதால் பிரிந்தது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஓவல் மைதானத்தில் 4வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற 86 வருட சாதனையை உடைத்த அவர்கள் புதிய சாதனையும் படைத்தனர்.

1880இல் வரலாற்றின் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஓவல் மைதானத்தில் கடந்த 1936இல் இதே இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் வாலி ஹமூத் – ஸ்டாண் ஆர்த்திங்டன் ஆகியோர் 266 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனையும் அவர்கள் படைத்தனர்.

- Advertisement -

இருப்பினும் அந்த மிகப்பெரிய சவாலை கொடுத்த ஜோடியை உடைத்த இந்தியா அடுத்ததாக வந்த கேமரூன் கிரீனை 6 ரன்களில் அவுட்டாக்கி மறுபடியும் சவாலை கொடுத்த ஸ்மித்தையும் 121 ரன்களில் காலி செய்தது. அதோடு நிற்காமல் அடுத்து வந்த மிட்சேல் ஸ்டார்க் 5, நேதன் லயன் 9 என டெயில் எண்டர்களையும் ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்த இந்தியாவுக்கு சவாலை கொடுத்த அலெக்ஸ் கேரியை 48 ரன்களில் ரவீந்திர ஜடேஜா அவுட்டாக்கினார்.

அந்த வகையில் 2வது நாளில் இந்திய பவுலர்கள் போராடியதால் ஒரு கட்டத்தில் 500 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா 469 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குறிப்பாக கடைசி 108 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவின் 7 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய பவுலர்கள் முதல் நாளில் விட்டதை 2வது நாளில் போராடி ஆல் அவுட்டாக்கினார்கள். அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெடுகளும் ஷமி, தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். ஆனாலும் அழுத்தம் நிறைந்த மாபெரும் ஃபைனலில் 469 ரன்கள் என்பது உண்மையாகவே மிகப்பெரிய இலக்காகும்.

இதையும் படிங்க:WTC Final : 108க்கு 8 விக்கெட், இந்தியாவின் மாஸ் போராட்டம் வெல்லுமா? ஓவலில் 87 வருட சாதனையை தூளாக்கிய ஸ்மித் – ஹெட் ஜோடி

இருப்பினும் பிட்ச் 3வது நாள் வரை முழுமையாக பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆஸ்திரேலியாவை போலவே இந்தியாவும் பெரிய ரன்களை குவித்து பதிலடி கொடுத்து இப்போட்டியில் வெல்வதற்கு போராடி வருகிறது. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மாவுடன் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் இந்தியாவை மீட்டெடுக்கும் வகையில் வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -
Published by