ஒருவேளை போட்டி துவங்கினால் இந்திய அணிக்கு பெரிய பிரச்சனை உள்ளது – அது என்ன தெரியுமா ?

Rain
- Advertisement -

உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

ind nz

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்நிலையில் மழையால் ஆட்டம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை தற்போது மழை நின்று நியூசிலாந்து அணி மீதமுள்ள நான்கு அவர்களை விளையாடினால் அது இந்திய அணிக்கும் பாதகம் என்று கருதப்படுகிறது. ஏனெனில் மீதமுள்ள 4 ஓவர்களில் நியூசிலாந்து அணி 30 ரன்கள் அடித்தால் கூட அந்த அணி 241 ரன்கள் தொடும். எனவே இந்திய அணிக்கு 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நிர்ணயிக்கப்படும். ஏற்கனவே மான்செஸ்டர் மைதானம் இரண்டாவது பேட்டிங்கின்போது ஸ்லோ ஆகும். எனவே தான் இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்பவர்கள் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

Pitch

ஏற்கனவே மைதானம் ஸ்லோவாக இருக்கும் இன்னும் மழை பெய்தால் என்ன சொல்ல வேண்டியிருக்கிறது. இந்திய அணியால் பெரிய ஷாட்களை ஆடமுடியாது. பந்து நின்று வரும் வழக்கமான வேகத்தை விட குறைவாக வரும். இதனால் இந்திய அணி அதிரடியாக ஆட முடியாது விரைவில் விக்கெட்டுகளை பறிகொடுக்க வாய்ப்புள்ளது. எனவே மழை நின்றபிறகு இந்திய அணி ஆட்டத்தை தொடங்குமாயின் சேசிங் செய்யும்பொழுது 210 ரன்கள் அடிப்பதே கடினம் என்று மைதான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement