Worldcup : துவக்கமே இவ்வளவு சொதப்பல். கோலியின் உலகக்கோப்பை கனவு பறிபோகிடுமோ – விவரம் இதோ

இந்திய அணி நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து

Kohli
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

ind

- Advertisement -

இந்திய அணி நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே குவித்தது. அதுவும் குறிப்பாக துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

அதனைத் தொடர்ந்து வந்த கோலி 18 ரன்களும் ராகுல் 6 ரன்களும் தோனி 17 ரன்கள் எடுத்து ஏமாற்றினர். பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆறுதல் அளிக்கும் வகையில் ஆடினர். பிறகு 37 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்த பயிற்சி போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய அணி பல தொடர்களாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்தது குறிப்பிடத்தக்கது.

rohith

இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இந்த தொடரில் பலமாக ஆடும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய அணி இந்த சரிவு இந்திய அணியின் ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. இதற்கு முதற்காரணம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முதல் 15 ஓவர்களில் இந்திய அணி விக்கெட்டை இழக்காமல் ஆடினால் பெரிய ரன்கள் அடிக்க முடியும். அப்படி மாறாக 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் விழுந்தால் இந்த நிலைமை இதுதான் என்று இந்த போட்டியின் மூலம் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement