மழை நின்று இந்தியா விளையாடினால் இந்திய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்கப்படும் – இலக்கு என்ன தெரியுமா ?

Rain-1
- Advertisement -

உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

Pitch

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்நிலையில் மழையால் ஆட்டம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மழை நின்று இன்னும் போட்டி துவங்காததால் இன்னும் சிறிது நேரத்தில் போட்டி துவங்கினாலும் இந்திய அணிக்கு பெரிய அளவிலான இலக்கு நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன்படி இந்திய அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலக்கு நிர்ணயிக்கப்படும்.

pandya

அதன் விபரம் இதோ ஒருவேளை 46 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டால் இந்திய அணிக்கு 237 ரன்கள் அடிக்க வேண்டிய நிலைமை வரும். 40 ஓவர்களில் 223 அல்லது 35 ஓவர்களில் 209 அல்லது 30 ஓவர்களில் 192 அல்லது 25 ஓவர்களில் 172 அல்லது 20 ஓவர்களில் 148 ரன்கள் என்ற அளவிற்கு ஓவர்களின் அடிப்படையில் இலக்கு நிர்ணயிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement