பேட்டிங் மற்றும் பவுலிங் என உலகத்தரத்தில் இருந்தும் இந்திய அணிக்கு வந்த புதிய சிக்கல் – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை அபாரமாக வெற்றி பெற்று அடுத்த போட்டிக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் வெளியான டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலிலும் 300 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. தற்போது உள்ள இந்திய அணியில் பேட்டிங்கை விட பந்துவீச்சில பலமாக உள்ளது.

shami

- Advertisement -

முன்பெல்லாம் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் போது பேட்டிங் பலத்தினை மட்டுமே நம்பி இறங்கும் சுழற்பந்து வீச்சாளர்கள் அணியின் வெற்றிக்கு உதவுவார்கள். ஆனால் தற்போது உள்ள இந்தியாவின் வேகப்பந்து வீச்சு உலக தரத்தில் உள்ளது. எந்த அணிக்கு எதிராகவும் நமது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வெற்றியைத் தேடித் தருகிறார்கள். மேலும் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடி வருவதால் இரு தரப்பிலும் இந்திய அணி தற்போது மிகுந்த பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் தற்போது இந்திய அணிக்கு புதிய சிக்கலாக வந்திருப்பது பீல்டிங் தான் அது பற்றி கூற வேண்டும் என்றால் நன்றாக ஃபீல்டிங் செய்து வந்த இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே, ரோஹித் மற்றும் கோலி என முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து கேட்சிகளை தவற விட்டனர். ஸ்லிப் திசையிலும் பல கேட்சிகளை தவற விட்டதை நாம் கண்டோம். இதனால் தற்போது கேட்சிகளை பிடிப்பதில் சற்று பலவீனம் இருப்பதாக தெரிகிறது.

Rahane

ஏனெனில் இத்தனை கேட்சிகளை விட்டாலும் பங்களாதேஷ் அணி பெரிதாக ரன் குவிக்கவில்லை என்பதால் கேட்சிகளை விட்டதனால் ஏற்பட்ட பிரச்சனை தெரியவில்லை. ஒருவேளை அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பங்களாதேஷ் அணி வீரர்கள் பெரிய ஸ்கோரை அடித்து இருந்தால் நிச்சயம் இந்த சொதப்பல் பேசுபொருளாக மாறி இருக்கும்.

Ind-1

எனவே தற்போது இந்திய அணி கேட்சிகளை பிடிப்பதில் கவனம் செலுத்த உள்ளது. அதனை மூன்றாம் நாள் முதல் செக்ஷனிலே ரோகித் மற்றும் கோலி ஆகியவருக்கு பயிற்சி அளித்தை நாம் கண்டோம். எனவே இனிவரும் போட்டிகளில் கேட்ச் பிடிப்பதற்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனை பெரிய பிரச்சினையாக மாற்றாமல் கூடிய விரைவில் இதற்கு தீர்வு காணவும் இந்திய அணி நிர்வாகம் தனி கவனம் செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement