உலக வரலாற்று டெஸ்ட் கிரிக்கெட்.! 2 வது நாள் இந்தியாவின் 2 சரித்திர சாதனை..!

indiatest
- Advertisement -

தனது கிரிக்கெட் வரலாற்றில் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி உலக சாம்பியனான இந்திய அணியிடம் படு தோல்வி அடைந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிய ஆடைந்ததுடன். ஒரே நாளில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றி உலக சாதனை படைத்துள்ளது.

india

- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்போடு நேற்று(ஜூன் 14)பெங்களூரு மைதானத்தில்தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று களமிறங்கிய இந்திய அணி தவான் அடித்த சாதனை சதத்துடன் தொடங்கியது. அவரை தொடர்ந்து முரளி விஜயும் சதத்தை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று ஆட்டத்தை தொடந்த இந்திய அணி 474 ரன்களை குவித்தது.

இதை தொடந்து இன்று விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 27.5 ஒவர்களுக்கு 109 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோவ் ஆன் ஆனது. முதல் இன்னிங்சில் இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 8 ஒவேர்களை வீசி 4 விக்கெட்களை கை பற்றினார்.

afgan

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை மீண்டும் தொடர்ந்த ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியின் அனுபவத்திற்கு முன்னாள் ஈடு கொடுக்க முடியாமல் 38.4 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியின் இரண்டாம் நாள் முடியில் இந்திய அணி ஒரே நாளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையும் படைத்துள்ளது.

Advertisement